Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மரமாக வளரும் புத்தகம்!

ரம் வளர்க்க என்ன செய்ய வேண்டும்? ஒரு மரக்கன்று வாங்கி நட வேண்டும்.  அர்ஜென்டினாவில் உள்ள குழந்தைகள், ஒரு கதைப் புத்தகத்தை வாங்குகிறார்கள். அதைப் படித்துவிட்டு, மண்ணில் புதைக்கிறார்கள். விரைவில், அது மரங்களாக வளர்கின்றன.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த கஸ்டி லிலிம்பி (Gusti Llimpi) மற்றும் அவரது மனைவி அன்னி டெஸிஸ் (Anne Decis) இணைந்து எழுதிய புத்தகம், My dad was in a jungle (என் அப்பா காட்டில் இருந்தார்). அது உலகம் முழுக்க ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது.

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பரவலாக வளரக்கூடிய அழகான பூ மரம், ஜக்ரண்டா (Jacaranda). இதன் விதைகளைப் பயன்படுத்தி, இந்தப் புத்தகத்தைத் தயாரித்திருக்கிறார்கள். புத்தகத்தைப் படித்து முடித்ததும், மண்ணில் புதைத்துப்  பராமரித்தால், சில நாட்களில் செடி துளிர்விடும்.

‘‘ ‘இயற்கையை நம் தேவைக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த இயற்கைக்குத் திருப்பிக்கொடுப்பது என்ன?’ என்ற கேள்வியும், மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றி குழந்தைகள் மனதில் பதியவைக்கவும் உருவானதுதான் இந்தப் புத்தக ஐடியா.’’ என்கிறார் கஸ்டி லிலிம்பி.

ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்டது இந்தக் கதைப் புத்தகம். அருகிவரும் ஹர்பி  கழுகு (Harpy Eagle) குறித்த ஓர் ஆய்வுக்காக  மத்தியதரைக் காடுகளுக்குச் சென்றிருந்தார் லிலிம்பி. அந்த அனுபவத்தை, அவரது 9 வயது மகன் தியோவுக்கு கதையாகச் சொன்னார்.  ஒரு காடும் அதில் வாழும் உயிரினங்களும் நம் வாழ்வோடு எப்படித் தொடர்புகொண்டுள்ளன என்பதை விளக்கும் கதை. இதற்கு, மனைவி அன்னி டெஸிஸ் படங்கள் வரைந்திருக்கிறார்.

இந்தக் கதைப் புத்தகத்தை, 2009-ம் ஆண்டு பெகுயெனோ எடிட்டர் (Pequeno Editor) என்கிற பதிப்பகம் வழக்கமான  புத்தகமாக வெளியிட்டது. சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒரு புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்த விளம்பர நிறுவனம் ஒன்று, இந்தக் கதையால் ஈர்க்கப்பட்டு, புத்தகத்தை புதுமையான முறையில் வெளியிட முன்வந்தது.

‘‘புத்தகங்களுக்கான காகிதங்கள்  மரங்களிலிருந்து பெறப்படுகின்றன. அந்த மரங்களுக்கே அவற்றைத் திருப்பி அளிக்கிறோம். முதலில், 20 புத்தகங்கள் மட்டுமே வெளியிட்டோம். ஏனெனில் இந்தப் புத்தகம், ரசாயனம் பயன்படுத்தாத இயற்கை மையால் அச்சிடப்பட்டது. இதில், ஜக்ரண்டா மரத்தின் விதைகளை பக்கங்களுக்கு இடையே வைத்து ஒட்டி, கைகளால் பைண்டிங் செய்தோம். இதுபற்றி  இணையத்தில் அறிமுகப்படுத்திய முதல் நாளிலேயே, 40,000 பேர் வரவேற்றனர். அடுத்து, 200 பிரதிகள் பதிப்பித்தோம். பள்ளிகள், நூலகங்கள், குழந்தைகள் அமைப்புகளுக்கு மட்டுமே விற்கப்பட்டன. இந்தக் கதையை வாசிக்கும் குழந்தைகள், நண்பர்களுடனோ அல்லது வீட்டுப் பெரியவர்களுடனோ இணைந்து, ஒரு மரமேனும் வளர்க்க விரும்புவார்கள்” என்கிறார், கஸ்டி லிலிம்பி.

இந்தியாவைப் பற்றியும் தமிழ்நாடு பற்றியும் கஸ்டி லிலிம்பியும் அவரது மனைவியும் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

‘‘எனது மனைவி, 2006–ல் தமிழ்நாட்டுக்கு வந்து, சில வாரங்கள் தங்கியுள்ளார். அங்கு வாழும் மக்களை எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக உணர்கிறோம். அங்குள்ள ஆலமரம், கொன்றை மரம் போன்ற  பற்பல மரங்கள் குறித்து என் மனைவி மணிக்கணக்கில் பேசுவார். மரங்கள், உங்கள் நாட்டுக்கு வளமும் அழகும் சேர்ப்பவை. அவற்றைப் போற்றிப் பாதுகாக்க மறவாதீர்கள்” எனச் சிலிர்க்கிறார் கஸ்டி லிலிம்பி.

இந்தப் புத்தகம் தயாராகும் முறையைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=xgy2a9tFSPU

கார்த்திகா முகுந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கிராமத்தில் இருந்து ஒரு சதுரங்க ராஜா!
குட்டிச் சிறுத்தைகளே... வெளியே வாருங்கள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close