இறந்தும் வாழும் பட்டாம்பூச்சிகள்!

யற்கையின் அழகுப் படைப்புகளில் ஒன்று, பட்டாம்பூச்சி. அந்தப் பட்டாம்பூச்சிகளை, தனது ஓவியத் திறமையால் மேலும் அழகாக்குகிறார், மெக்ஸிகோவைச் சேர்ந்த கிறிஸ்டியம் ரமோஸ் (Cristiam Ramos).

இவர் ஒரு வித்தியாசமான ஓவியர். சாக்லேட் கேண்டிகள் மீது, நெயில் பாலிஷ் மற்றும் டூத்பேஸ்ட் கொண்டு ஓவியங்களைத் தீட்டி அசத்துகிறார். அதுவும் போர் அடித்துவிட, இறந்துபோன பெரிய பட்டாம்பூச்சிகளைச் சேகரித்து, அவற்றின் இறக்கைகளில் ஓவியங்களை வரைந்திருக்கிறார். 12 சென்டிமீட்டர் நீளமுள்ள இறக்கைகள் மீது 56 மணி நேரம் செலவழித்து, நுணுக்கமான ஓவியங்களைத் தீட்டி, உலகிலேயே பட்டாம்பூச்சி இறக்கைகள் மீது படம் வரைந்த முதல் ஓவியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார், கிறிஸ்டியம் ரமோஸ்.

இறந்த பின்பும் எல்லோரின் மனங்களைக் கொள்ளை அடிக்கின்றன இந்தப் பட்டாம்பூச்சிகள்!

என்.மல்லிகார்ஜுனா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick