ஒரு தேதி...ஒரு சேதி...

அன்புச் சுட்டி நண்பர்களுக்கு...

ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் நமக்குக் கிடைத்த பரிசுதான். தினந்தோறும் நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம். நிறைய செய்திகளைக் கேட்கிறோம். அதில் பயனுள்ள செய்திகளை மனதில் வாங்குவோம். ‘ஒரு தேதி... ஒரு சேதி’யில் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் உங்களை புதிய நண்பர்களாக மாற்றும்.

‘புரூஸ் லீ’ என்ற பெயரைக் கேட்டாலே, உடல் சிலிர்க்கும்.  சண்டைக் காட்சிகளில், இவர் உடல் அசைக்கும் வேகத்தை, படம் பிடிக்கத் திணறும் அளவுக்கு வேகமாகச் சண்டை போடக்கூடியவர். புரூஸ் லீயைப் பற்றி பலருக்கும் தெரியாத செய்தி, இவர் சிறப்பாகக் கவிதைகள் எழுதக்கூடியவர் என்பது. ஜென் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவர். இவரைப் பற்றிய இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை, நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் யார்?’ என்று கேட்டால், உடனே இவரின் பெயரைச் சொல்வார்கள். இவர் நடித்த படங்களில் ஒன்று, வீரபாண்டிய கட்டபொம்மன். வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி நடக்க வேண்டும் என்று இயக்குநர் விவரித்து எழுதியிருந்ததையும்விட சிறப்பாக இருந்தது, சிவாஜியின் நடை. எப்படி அவ்வாறு நடித்தீர்கள் எனக் கேட்டபோது, ‘ஒரு மாவீரன் எப்படி நடப்பான் என யோசித்தேன். அது, தானாக வந்துவிட்டது’ என்றாராம். இப்படி திரையில் வரும் பாத்திரமாகவே மாறி, நம்மைப் பரவசப்படுத்திய சிவாஜி கணேசன் பற்றிய சுவையான தகவல்களை அறிந்துகொள்வோமா?

கதைகள் படிக்க யாருக்குத்தான் பிடிக்காது. அந்தக் கதை, நம்மைப் புதிய உலகத்துக்கே அழைத்துச் சென்றால் எப்படி இருக்கும்! அந்தப் புத்தகத்தைவிட்டுப் பிரியவே மாட்டோம் அல்லவா? அப்படியான ஒரு கதையை எழுதியவர்தான், லூயிஸ் கரோல். ‘ஆலிஸின் அற்புத உலகம்’ எனும் இவரது கதைப் புத்தகம், 150 ஆண்டுகளுக்கும் மேலாக விரும்பிப் படிக்கப்படுகிறது. கணிதப் பேராசிரியரான இவருக்கு, இந்தக் கதையை எழுதத் தூண்டுதலாக இருந்தது எது? அது பற்றி இன்னும் பல அருமையான தகவல்களைக் கேட்கத் தயாரா?

இன்னும் பல தேதிகள்... இன்னும் பல சேதிகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick