உள்ளங்கையில் உயிர் ஓவியம்!

ன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் ஃபுட், போல, இன்ஸ்டன்ட் ஓவியமும் வந்துவிட்டது.

கலிஃபோர்னியாவில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுபவர், ரஸ்ஸல் போவெல் (Russell Powell). ஓவியத்தில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவல். தன் இடது உள்ளங்கையில் மையைப் பூசி, அது காய்வதற்குள், வலது கையால் பரபரவெனத்  தீற்றுகிறார். சில நிமிடங்களில் உள்ளங்கையைக் காட்டி, பார்ப்பவர்களை ‘வாவ்’ என வாயைப் பிளக்கவைக்கிறார்.

சிரிப்பு, சோகம், வீரம் எனப் பல்வேறு உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் முகங்கள், அவரது உள்ளங்கையில் உருப்பெறுகின்றன. 3D ஓவியம் போல அசத்துகின்றன. உள்ளங்கை ஓவியத்தை அப்படியே வெள்ளைத்தாளில் அழுத்துகிறார் ரஸ்ஸல். அவ்வளவுதான், இன்ஸ்டன்ட் ஓவியம் ரெடி. இந்த உள்ளங்கை ஓவியங்களுக்கு, ரஸ்ஸல் வைத்திருக்கும் பெயர், ஹேண்ட் ஸ்டாம்ப்பிங் (Hand stamping).

என்.மல்லிகார்ஜுனா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick