ஒரு தேதி...ஒரு சேதி...

அன்புச் சுட்டி நண்பர்களுக்கு...

உங்களுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டா? டைரி எழுதும்போது, அன்று கேட்ட புதிய தகவல்களைக் குறித்துவைக்கலாம். பள்ளியில் நடைபெறும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற, இந்தக் குறிப்புகள் உதவும். ‘ஒரு தேதி ஒரு சேதி’யில் நீங்கள் கேட்கும் தகவல்களை டைரியில் குறித்துக்கொள்வதை, தினசரி வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

எளிமைக்கு இன்னொரு பெயர் சொல்லுங்கள் என்றால், இவரின் பெயரைத்தான் கூறுவார்கள். இவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும்கூட. அதற்காக இவர் சிறைத் தண்டனை பெற்றபோது, முதுகில் சவுக்கால் அடி வாங்கியவர். நாடு சுதந்திரம் பெற்று, தமிழ்நாட்டு அமைச்சர் அவையில் முக்கியப் பொறுப்புகள் வகித்தபோதும், எளிமையாகவே வாழ்ந்தார். கக்கனைப் பற்றி ஆச்சர்யமான செய்திகளைக் கேட்கத் தவறாதீர்கள்.

மி்யான்மர் நாட்டின் அரசியல் தலைவர், ஆங் சான் சூகி. இவரின் தந்தை அந்த நாட்டின் ராணுவத்தை உருவாக்கியவர். ஆங் சான் சூகி இரண்டு வயதாக இருக்கும்போதே, தந்தை எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவில் கல்வி பயின்ற ஆங் சான் சூகி, ஐ.நா சபையில் பணி செய்தார். தன் நாட்டு மக்களின் துன்பம் கண்டு, ராணுவத்துக்கு எதிராகப் போராடக் களம் இறங்கினார். அகிம்சை வழியில் போராடிய இவருக்குக் கிடைத்தது, 20 ஆண்டு வீட்டுக் காவல் சிறை. அதற்குப் பின் நடந்தவை, நாட்டின் வரலாற்றில் திருப்பங்களை உண்டாக்கின. அவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா!

 ‘கால்பந்து விளையாட்டின் கடவுள்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர், பீலே. தன் தந்தை கால்பந்து ஆடுவதைப் பார்த்து பீலேவுக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. அந்த ஆர்வம்தான், 17 வயதில் பிரேசில் நாட்டு கால்பந்து அணியில் இடம்பெற வைத்தது. ஐரோப்பியக் கண்டத்தில் எந்த நாடும் உலகக் கோப்பையைப் பெற்றிருக்காத நிலையில், பிரேசிலுக்கு உலகக் கோப்பையை அளித்த அசகாய சூரர். அவரின் வெற்றிப் பயணம் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அதற்கு அவர் தந்த விலை ஏராளம். அவற்றை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

இன்னும் பல தேதிகள்... இன்னும் பல சேதிகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick