ஒரு தேதி...ஒரு சேதி...

ன்புச் சுட்டி நண்பர்களுக்கு...

தகவல் என்பது ஒரு சாவி போன்றது. ஒரு மனிதர் பற்றிய தகவல், அவரின் வாழ்க்கையைத் திறந்து பார்க்க  உதவுகிறது. அந்த மனிதர் போற்றப்படுபவர் என்றால், அந்தச் சாவி நமது வாழ்க்கைக்கு மிக முக்கியமான மாற்றங்களைத் தரும்.  உங்கள் சிந்தனைக்கு தினம் ஒரு சாவியாக, 'ஒரு தேதி ஒரு சேதி’ அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

உலகமே வியக்கும் சிந்தனையாளர். தனக்கு முந்தைய  சிந்தனையாளர்களிடம் இருந்து மாறுபட்டு, உழைக்கும் மக்களுக்கான தத்துவத்தை எழுதியவர். இவரின் 'மூலதனம்’ எனும் நூல், உலகின்  வழிகாட்டி. ஆனால், இவரின் குடும்ப வாழ்க்கை கண்ணீரால் நிறைந்தது. ''பிறந்தபோது உங்களுக்குத் தொட்டில் கட்ட காசு இல்லையாம். இப்போது, அடக்கம் செய்யவும் காசு இல்லை!' என இவரின் மனைவி, ஜென்னி, கண்ணீரால் அஞ்சலி செலுத்தினார். அந்த மாமேதை, கார்ல் மார்க்ஸ். இவரைப் பற்றி இன்னும் உருக்கமான தகவல்களை அறியலாமா?

உலகில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் விஞ்ஞானிகளின் பங்கு  முக்கியமானது. அவர்கள் புகழ்பெற்ற பின் எல்லோரும் கொண்டாடுவார்கள். ஆனால், அவர்களின் இளமைக் கால சம்பவங்கள் வேறாக இருக்கும். இவருக்கும் அப்படித்தான். புகழ்பெற்ற சுவிஸ்பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்தார். பின்னாளில், 'உலகிலேயே ஒன்றரை கிலோ அதிசயத்தை (மூளை) அதிகம் பயன்படுத்திய மனிதனுக்கே இடம் கிடைக்காத கல்லூரி இது’ என்கிற வாசகம் இன்றைக்கும் அங்கே அலங்கரிக்கிறது. அவர், உலகமே கொண்டாடும் ஐன்ஸ்டீன். அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோமா?

இந்திய தேசத்தின் தந்தை, காந்தியடிகள் பற்றி நிறையத் தெரியும்.  அவரின் பக்கபலமாக, ஊக்கசக்தியாக இருந்த அவரின் மனைவி கஸ்தூரிபா காந்தியைப் பற்றி எத்தனை பேருக்கு, எத்தனை சதவிகிதம் தெரியும். காந்தியடிகளின் செயல்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்றால், தயங்காமல் விவாதித்து, தன் உரிமையை நிலைநாட்டும் அந்தப் பெண்மணியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோமா?

இன்னும் பல தேதிகள்... இன்னும் பல சேதிகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick