’கறை’ ஓவியங்கள்!

’கறை நல்லது. முக்கியமா, காபி கறை ரொம்ப நல்லது’ என்கிறார், கலிபோர்னியாவைச் சேர்ந்த கார்ட்டர் ஆஸ்மன் (Carter Asmann).

இவரை, 'சிறந்த ஓவியர்’ என்று மட்டும் சொன்னால், அந்த வார்த்தைகளே கோபித்துக்கொள்ளும். 'அதுக்கும் மேலே’ மக்களைக் கவர்ந்தவர் கார்ட்டர்.

காபி கோப்பையின் அடிப்பகுதி, சில சமயம் டேபிள் மீது கறை ஏற்படுத்தும். அந்த வட்ட வடிவக் கறையை, வெள்ளைத்தாள்களில் வைத்துக்கொள்ளும் கார்ட்டர், அதை மையப்படுத்தி் அட்டகாசமான ஓவியங்களை உருவாக்குகிறார். தான் உருவாக்கிய கறை ஓவியங்களை இன்ஸ்டாகிராம்  (Instagram) மூலம் வெளியிட்டு, ரசிகர்களைக் கவர்கிறார்.

இந்த ஓவியங்களின் கிரியேட்டிவிட்டியைப் பார்த்ததுமே, சூடான சூப்பர் காபி குடித்த புத்துணர்ச்சி ஏற்படும்.

என்.மல்லிகார்ஜுனா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick