ஒரு தேதி...ஒரு சேதி...

அன்புச் சுட்டி நண்பர்களுக்கு...

ஒவ்வொரு நாள் விடியலும் நமக்கு புதியதே. ஒரு நாளில் நாம் எவ்வளவு விஷயங்களைப் புதிதாகத் தெரிந்து கொள்கிறோம் என்பதே, அந்த நாளை சிறப்பானதாக மாற்றுகிறது. ‘ஒரு தேதி ஒரு சேதி’ மூலம் தினந்தோறும் நீங்கள் கேட்கும் தகவல், புதிய விடியலாக, புதிய உலகத்தைத் திறந்துவிடுகிறது. இதில், நீங்கள் கேட்கும் தகவல்களை பள்ளித் தகவல் பலகையில் எழுதி, பாராட்டுப் பெறலாம்.

ஹோட்டலில் வேலை பார்த்து, பைக் ஒன்றை அவர் வாங்கினார். அதை, அக்குவேர் ஆணிவேராகப் பிரித்து, மீண்டும் இணைத்தார். இப்படித்தான் ஆரம்பித்தது அவரின் அறிவியல் வேட்டை. வெட்டுக்காயம் உண்டுபண்ணாத ஷேவிங் பிளேடு, வாக்குப்பதிவு இயந்திரம், பலவித பூட்டுகளைத் திறக்கும் மாஸ்டர் கீ என, அவரின் கண்டுபிடிப்புகளைச்  சொல்லிக்கொண்டே போகலாம். அரசாங்கத்தின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காமலேயே, பல சாதனைகளைப் புரிந்த ஜி.டி.நாயுடுவைப் பற்றி ஆச்சர்யமான விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டுமா?

பள்ளியில் படிக்கும் வயதில், ‘மக்குப் பையன்’ எனச் சொல்லப்பட்டவர். ஆனால், பெரியவனாக  ஆன பிறகு, ‘இயற்பியலின் தந்தை’ என்று உலகமே அவரைக் கொண்டாடியது. நாம், எங்கே ஆப்பிள் பழத்தைப் பார்த்தாலும் சட்டென்று நினைவுக்கு வரும் பெயர்,   நியூட்டன். அவரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோமா?

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடி சிறை சென்றவரை தூக்கில் போட முடிவுசெய்தது ஆங்கிலேய அரசு. எதற்கும் அஞ்சாத அந்த வீரனை, தூக்கில் போடுவதற்காக அழைத்துச் செல்ல காவலர்கள் வருகிறார்கள். அந்த மகத்தான வீரன் காவலர்களிடம், ‘சிறிது நேரம்’ கேட்கிறார். “நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்துவிட்டு வருகிறேன்” என்கிறார். இறப்பதற்குமுன், கடைசி நிமிடம் வரை வாசிப்பை நேசித்த பகத் சிங் பற்றி இன்னும் பல ஆச்சர்யங்களைக் கேட்க ஆவலா?

இன்னும் பல தேதிகள்... இன்னும் பல சேதிகள்! 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick