கிரிக்கெட் மியூசியம்!

ந்தியாவில், மொழிகள் பல பேசுபவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் பல பண்டிகைகள் இருக்கின்றன. ஆனால், இனம், மொழி, ஏழை, பணக்காரர் எனும் வேறுபாடுகளைக் கடந்து, குழந்தை முதல் தாத்தா, பாட்டிகள் வரை உற்சாகமாகக் கொண்டாடும் ஒரே விளையாட்டு, கிரிக்கெட்தான்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும்போது, பரபரப்பான நகரச் சாலைகள் வெறிச்சோடிப்போகும். ஐபிஎல் தொடர் நடக்கும்போது, ‘சென்னை, மும்பை...’ எனத் திரிவார்கள். உணவு, தண்ணீருக்கு அடுத்து, இந்தியர்களின் அத்தியாவசியமாக ஆகிவிட்ட கிரிக்கெட்டுக்காக, ஒரு மியூசியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

மஹாராஷ்ட்டிராவைச் சேர்ந்த ரோஹன் படே (Rohan Pate), தீவிரமான கிரிக்கெட் ரசிகர். 2012-ம் ஆண்டு, புனே நகரில் ‘பிளேட்ஸ் ஆஃப் குளோரி’ (Blades of Glory) என்ற பெயரில், கிரிக்கெட் மியூசியத்தை உருவாக்கினார். இதைத் திறந்துவைத்தவர், நமது மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின். அப்படி இந்த மியூசியத்தில் என்னதான் இருக்கிறது?

பிரபல கிரிக்கெட் வீரர்கள் கையொப்பமிட்ட மட்டைகள், ஹெல்மெட்டுகள், கையுறைகள், காலணிகள், டி-ஷர்ட்டுகள், பந்துகள் என அனைத்தையும் இங்கே காணலாம்.

டெஸ்ட் போட்டிகளில், 10,000 ரன்களைக் கடந்த வீரர்கள் பயன்படுத்திய  மட்டைகள், ஜெர்சிக்கள் எல்லாம், ‘லெஜெண்ட்’ என்ற அறையில் உள்ளன.

சச்சினுக்காக ஓர் அறை ஒதுக்கப்பட்டு, அவரது 100 சதங்களைச் சிறப்பிக்கும் விதத்தில், 100 சிறிய மட்டைகள், புகைப்படங்கள் உள்ளன.

முத்தையா முரளிதரன் 800-வது விக்கெட்டை வீழ்த்தியபோது அணிந்திருந்த டீ-ஷர்ட்.

டெஸ்ட் போட்டிகளில் ட்ரிபுள் செஞ்சுரி விளாசிய கிரிஸ் கெய்ல், சேவாக், ஜெயவர்த்தனே ஆகியோரின் மட்டைகள்.

1975 முதல் 2011 வரை உலகக் கோப்பையை வென்ற அணியின் கேப்டன்கள் கையெழுத்திட்ட டி-ஷர்ட்டுகள், ஸ்வெட்டர்கள் இருக்கின்றன.

வாசிம் அக்ரம், வக்கார் யூனஸ், ஷேன் வார்னே, பிரெட் லீ போன்ற பந்து வீச்சாளர்கள், போட்டிகளில் பயன்படுத்திய பந்துகள் உள்ளன.

வெளிநாட்டு மற்றும் நம் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்த மியூசியத்துக்கு விசிட் அடித்து, தாங்கள் பயன்படுத்திய பொருட்களைக் கொடுத்துவருகிறார்கள். இந்த மியூசியத்துக்கு விசிட் அடிக்கும் ரசிகர்கள், தங்களுக்குப்  பிடித்த கிரிக்கெட் வீரர்களை நேரில் பார்த்தது போல மகிழ்ச்சி அடைகிறார்கள்.

என்.மல்லிகார்ஜுனா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick