Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுட்டி ஸ்டார் நியூஸ்

இயற்கை மருத்துவம்!

இளமையாக வாழ, நெல்லிக்கனி.

இதயத்தை வலுப்படுத்த, செம்பருத்தி.

மூட்டு வலியைப் போக்க, முடக்கத்தான் கீரை.

இருமல், மூக்கடைப்பு குணமாக்க, கற்பூரவல்லி.

நீரிழிவு நோய் குணமாக, அரைக்கீரை.

குடல் புண்ணைக் குணமாக்க, மணத்தக்காளி.

ரத்தத்தைச் சுத்தமாக்க, அருகம்புல்.

புற்று நோயைக் குணமாக்கும், சீத்தா பழம்.

மூளை வலிமைக்கு, பப்பாளி.

ஞாபகசக்தியைக் கொடுப்பது, வல்லாரை.

அ.காயத்ரி பிரியதர்ஷினி

ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மே.நி.பள்ளி,

கடையநல்லூர், தென்காசி.

வேட்டையாடும் இறால்!

மயிலின் வண்ணங்களைப் போல கண்களைக் கவரும், ‘பீக்காக் மார்ட்டிஸ் ஷ்ரிம்ப்’ (Peacock Martis Shrimp) என்னும் இறால், இரையை வித்தியாசமாக வீழ்த்தும். இரை அருகில் வந்ததும், அதனைக் கால்களால் குத்தும். கண் சிமிட்டும் நேரத்துக்குள் 50 முறைகளாவது குத்திவிடும். அந்த அளவு வேகமாகச் செயல்படும் ஆற்றல் பெற்றது. இரை, உயிரை விட்டுவிட்டதும், சாப்பிட்டுவிடும்.

ம.சுகப்பிரதாயினி

எஸ்.சி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

குரோம்பேட்டை, சென்னை-44.

ஆறு சுவைகளும் ஆற்றலும்!

ஒரு விருந்தில் ஆறு சுவைகளும் இருந்தால், அதை அருமையான சாப்பாடு என்பார்கள். அந்த ஆறு சுவைகளின் அவசியம் என்ன என்று பார்ப்போமா...

இனிப்பு: உடல் தசையை அதிகமாக வளர்க்கும்.

கசப்பு: வேண்டாத கிருமிகளை அழிக்கும் சக்தியைத் தரும்.

புளிப்பு: ரத்தக் குழாயில் உள்ள அழுக்கை நீக்கும்.

கார்ப்பு: உடல் வெப்பம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும்.

உவர்ப்பு: ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

துவர்ப்பு: உடலில் காயம் ஏற்படும்போது, ரத்தத்தை உறையச் செய்யும்.

கா.காளியம்மாள்

சா.இ.நா.எத்தல் ஹார்வி பெண்கள் மே.நி.பள்ளி,

சாத்தூர்.

ஆர்டிக்டெர்ன்!

ஆர்க்டிக் டெர்ன் என்ற பறவை, ‘மிக அதிக தூரத்தைக் கடக்கும் பறவை’ என்ற சாதனையைப் படைத்துள்ளது. மழைக் காலத்தில், அன்டார்ட்டிகாவின் தென் பகுதியில் வசிக்கிறது. இளவேனிற் காலத்தில், ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 35 ஆயிரத்து 400 கிலோமீட்டர் கடக்கிறது. உலகில், மற்ற எந்தப் பறவையையும்விட, அதிக நேரம் சூரியனைப் பார்க்கிறது. பகல் வெளிச்சத்தில், எட்டு மாதங்கள் வசிக்கும். நான்கு மாதங்கள்,  இருட்டில் கழிக்கும்.

ஆர்.வி.சிவஸ்ரீ

மேரி மாதா சி.எம்.ஐ.

பப்ளிக் ஸ்கூல், தேனி.

செல்லப் பொம்மைகள்!

அமெரிக்காவின் லூயிவில் பகுதியைச் சேர்ந்த ஜெனிஃபர் கிரஹாம், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப் போலவே, அச்சு அசலாக இருக்கும் பொம்மைகளைச் செய்து தருகிறார். தாங்கள் வளர்த்த செல்லப் பிராணி இறந்துபோனால், அவற்றின் நினைவாக இந்தப் பொம்மையை வைத்துக் கொள்கிறார்கள். அந்தப் பிராணியின் புகைப்படம், அளவு, உயரம் போன்றவற்றை கொடுத்துவிட்டால் போதும்... நாய், பூனை, குதிரை, என எந்த விலங்கையும் பொம்மையாகச் செய்துவிடுகிறார்.

ச.மதுரவாணி

ஜேப்பியார் பள்ளி, செம்மஞ்சேரி,

சென்னை.

பிரமாண்டமான ஈஸ்டர் கேக்!

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள, கிராண்ட் ஃப்ளோரிடியன் ரிசார்ட் (Grand Floridian Resort), பிரமாண்டமான ஈஸ்டர் கேக்குகளை (முட்டை  வடிவில்) உருவாக்கி, விற்பனைக்கு வைத்தது. இந்த கேக் ஒவ்வொன்றும், சுமார் 5 கிலோ எடை கொண்டவை. டிஸ்னி கதாபாத்திரங்களை சாக்லேட் மூலம் ஓவியங்களாக உருவாக்கி இருந்தார்கள். இது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுத்தது.

ஸ்ரீ மீரா சுப்பிரமணியன்

ஆதர்ஷ் வித்யா கேந்திரா,

நாகர்கோவில்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சிரிக்கும் காகிதப் பூக்கள்!
வாளியிலே குளிர் நிலா!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close