ஒரு தேதி...ஒரு சேதி...

அன்புச் சுட்டி நண்பர்களுக்கு...

பூ கட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு பூவாகத் தொடுத்து, அழகானமாலையாக உருவாக்குவார்கள். அதுபோலத்தான், நாம் அறிந்துகொள்ளும் தகவல்களும். தினந்தோறும் ஒரு தகவலைக் கேட்டுக்கொண்டே வாருங்கள். மாத முடிவில் 30 வகைப் பூக்கள் சேர்ந்த கதம்ப மாலை உங்களிடம் இருக்கும்.

கிரிக்கெட் வரலாற்றில், தன் அதிரடி ஆட்டத்தால் தனி இடம் பிடித்தவர், பிரையன் லாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரு ஆட்டத்தில் 501 ரன்கள் குவித்து, இன்று வரை உலக சாதனையைத் தக்கவைத்திருக்கிறார். சிறந்த விளையாட்டு வீரராக மட்டும் அல்லாமல்,   போற்றத்தக்க மனிதநேயம் கொண்டவர். புற்றுநோயால் இறந்த அம்மாவின் நினைவாக ஓர் அறக்கட்டளை தொடங்கி, எண்ணற்ற மக்களுக்கு மருத்துவச் சேவை செய்துவரும் லாராவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.

இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்று, இந்தியாவுக்குப்  பெருமை சேர்த்தவர், ரவீந்திரநாத் தாகூர். நமது நாட்டின் தேசியகீதம் இவரது பேனாவில் பிறந்ததே. ஜாலியன் வாலாபாக்கில் ஆங்கிலேய அரசு நடத்திய பயங்கரத்தைக் கண்டித்து, அன்றைய அரசு அளித்த சர் பட்டத்தைத் துறந்த மகாகவி, தாகூர். ஓவியம் வரைவது, இசை அமைப்பது, நாடகங்கள் எழுதுவது எனப் பன்முகத் திறமைவாய்த்த தாகூரைப் பற்றிய திகட்டாத செய்திகள் ஏராளம் உண்டு.

உலகக் குழந்தைகளின் செல்ல நாயகன், மிக்கி மவுஸைப் பிடிக்காதவர்கள் உண்டா? அதை உருவாக்கியவர்தான் வால்ட் டிஸ்னி. தான் சாப்பிட்டுவிட்டு மிச்சம்வைக்கும் உணவைச் சாப்பிட, தினமும் தேடிவரும் எலியை டிஸ்னிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால், அந்த எலியின் சேட்டைகளை ரசிக்க ஆரம்பித்தார். அதையே வரைந்து,  ‘மார்டிமர் மவுஸ்’ என்று பெயரும் வைத்தார். அது, ‘மிக்கி மவுஸ்’ என்று  மாறியது எப்படி? வால்ட் டிஸ்னி பற்றிய இன்னும் பல சுவையான தகவல்களைக் கேட்க நீங்க ரெடியா?

இன்னும் பல தேதிகள்... இன்னும் பல சேதிகள்!


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick