நெஞ்சை அள்ளும் டிஸ்னி தேவதைகள்!

வால்ட் டிஸ்னி படங்கள் என்றாலே, கொண்டாட்டம்தான். அதிலும் ஸ்பெஷல், டிஸ்னியின் குட்டித் தேவதைகள். பீட்டர் பேன் (Peter Pan) நாவலை எழுதிய ஜே.எம்.பேரியின் (J.M.Barrie) யோசனையில் தோன்றிய இந்தத் தேவதைகள் பற்றி் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

டிங்கர் பெல் (Tinker Bell): 1904-ல் உருவாக்கப்பட்ட பீட்டர் பேன் (Peter Pan) நாவலில், முக்கிய கேரக்டராக அறிமுகமான தேவதை. இலைகளால் செய்த பச்சை நிற உடை, குறும்பு கொப்பளிக்கும் நீலக் கண்கள், தங்க நிறத்தில் இறக்கைகள் என மனதை அள்ளும் டிங்கர் பெல், டிஸ்னி தேவதைகளில் ஹீரோயின். தொலைக்காட்சி சீரியல்களில் சக்கைப் போடு போட்ட டிங்கர் பெல்,  திரைப்படங்களாகவும் வந்துள்ளன. கடைசியாக டிசம்பர் 2014-ல் வந்த ‘டிங்கர் பெல் அண்டு த லெஜெண்ட் ஆஃப் த நெவர்பீஸ்ட்’ (Tinker Bell and the Legend of the Neverbeast), 87 லட்சம் டாலர் வசூலைக் குவித்தது.

ரோஸெட்டா (Rosetta): பூக்கள், செடிகளைப் பராமரிக்கும் கார்டன் ஏஞ்சல். டிங்கர் பெல்லுடன் இணைந்து, தேவதைகள் உலகத்துக்கு வரும் ஆபத்தை, பூக்கள் மற்றும் தாவரங்கள் உதவியோடு சரிசெய்யும் தேவதை.

விடியா (Vidia): வேகமாகப் பறக்கும் ஏஞ்சல். பர்பிள் கலர் டாப், பேண்ட், கறுப்பு கலரில் நீளமான போனி டெயில் ஹேர் ஸ்டைல். இதுதான் விடியா. கொஞ்சம் கோபக்காரி. எந்தக் காரியத்தையும் வேகமாகச் செய்துவிடும் தேவதை.

சில்வர்மிஸ்ட் (Silvermist): நீல நிற லில்லிப் பூ இதழ்களால் ஆடை அணிந்தவள். ஆறு, ஏரி, கடல், ஆகியவற்றைப் பராமரிக்கும் நீர்த் தேவதை.

இரிடெஸ்ஸா (Iridessa): வெளிச்ச தேவதை. சூரிய ஒளி, வானவில் ஆகியவற்றைப் பராமரிப்பவள். சூரியகாந்தி இதழ் ஆடை, கறுப்பு நிற முடி, ப்ரௌன் கண்கள்.

இந்த கேரக்டர்கள்தான் டிஸ்னி தேவதைகளில் பிரதானமானவை. இது தவிர, 500-க்கும் மேற்பட்ட தேவதைகள் உள்ளன. இந்தத் தேவதைகளுக்காகவே http://disney.in/DisneyOnline/fairies/  என்ற தளத்தை உருவாக்கி இருக்கிறது, டிஸ்னி நிறுவனம்.

இந்தத் தளத்தில் டிஸ்னி தேவதைகள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதோடு, நீங்களே புதிய தேவதைகளை உருவாக்கி விளையாடலாம். அதற்காக, போட்டிகளும் நடத்தப்படுகின்றன.  கோடை விடுமுறையில், உங்கள் திறமைக்கு சவால். வீட்டுக்குள் இருந்தவாறு டிஸ்னி தேவதைகளை உருவாக்கி, ‘குட்டி பிரம்மா’ எனப் பெயர் எடுங்கள்.

ஷாலினி நியூட்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick