ஒரு தேதி...ஒரு சேதி...

அன்புச் சுட்டி நண்பர்களுக்கு...

நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும், மனிதர்களுக்கும் பின்னால்,  நமக்குத் தெரியாத செய்திகள்  பல இருக்கின்றன. பெயர் மட்டுமே தெரிந்த மனிதர்களைப் பற்றிய தெரியாத செய்திகளை அறியும்போது ஆச்சர்யம் உண்டாகும். ‘ஒரு தேதி ஒரு சேதி’ தினந்தோறும் உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தருவதற்கு காத்திருக்கிறது.

கிரிக்கெட் வாசனையே இல்லாத குடும்பத்தில் பிறந்தவர்,  இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்தார். ஒரு முறை, ஆஸ்திரேலிய அணி வீரர் அடித்த பந்தை, பவுண்டரி என்று நடுவர் அறிவிக்க, ஃபீல்டிங்கில் இருந்த இவர், அதை சிக்ஸர் என்று கூறினார். அந்த அளவுக்கு விளையாட்டில் நேர்மையைக் கடைப்பிடித்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி குறைந்த ரன்களே அடித்திருந்தபோதும், சக வீரர்களை ஊக்கப்படுத்தி, கோப்பையைத் தட்டி வந்த கபில் தேவ் பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா?

‘பெண்களால் எதையும் சாதிக்க முடியும்’ என்று உணரவைத்த பெண் இவர். இந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி, சிறு வயதிலேயே துணிச்சல் மிக்கவர். டென்னிஸ் விளையாட்டில் ஆசிய சாம்பியன் பெற்றவர். காவல் துறை அதிகாரியான பிறகு, திஹார் சிறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். ‘நான் துணிந்தவள்’ எனும் இவரது சுயசரிதையில் பல்வேறு ஆச்சர்யமான சம்பவங்களை எழுதினார். இவரைப் பற்றி இன்னும் பல விஷயங்கள் உங்களுக்காக...

உலகம் முழுவதும் தெரிந்த பெயர்களில் முக்கியமானவர்,    சேகுவரா. ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து, கியூபா விடுதலைக்குப் போராடியவர். கியூபா மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகப் பலவித முயற்சிகளை மேற்கொண்டவர். கியூபாவில் பல உயர் பதவிகள் கொடுக்கப்பட்டாலும், அர்ஜென்டினா நாட்டின் விடுதலைக்காக போராடச் சென்ற ஒப்பற்ற போராளி. இவர் வாழ்வில் நடந்த வீரம் மிக்க அனுபவங்களை அறிந்துகொள்வோமா?

இன்னும் பல தேதிகள்... இன்னும் பல சேதிகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick