Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செல்லக்குட்டி

வீட்டில் பூனை வளர்க்கப் போறீங்களா? நாய்களைக் காட்டிலும் பூனைக்குட்டிகள் அழகானவை, பாதுகாப்பானதும் கூட. பூனைக்குட்டியை எப்படி வளர்ப்பது... எப்படிப் பராமரிப்பது?

 பூனைகள், சுதந்திரமாக வளர விரும்புபவை. அதனால், பூனைக்குட்டியை கட்டிவைக்கவோ, அடைக்கவோ கூடாது. வீட்டுக்குள் சுற்றவிடுங்கள்.

 பூனைகளை தினமும் குளிப்பாட்டத் தேவை இல்லை. எப்போதாவது, குளிர்ந்த நீரில் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும். சுடுதண்ணீர், பூனைகளுக்கு அரிப்பை ஏற்படுத்தும்.

 தினமும் நான்கு முறை உணவு கொடுக்க வேண்டும். பூனைக்குட்டி பிறந்த 5-6 வாரங்களுக்கு பால் மட்டுமே போதும். அதன் பிறகு, தயிர், பால் கொடுத்துப் பழக்க வேண்டும். பிறகு, மெள்ள மெள்ள சாப்பாட்டைக் கொடுத்து சாப்பிடப் பழக்கலாம்.

 மாலை நேரத்தில் வெளியில் அழைத்துச் சென்று, உங்கள் செல்லப் பூனையோடு ஓடியாடி விளையாடுங்கள். உங்கள் மீது பாசமாக இருக்கும். பூனைக்கும் உடற்பயிற்சியாக இருக்கும்.

 உங்கள் செல்லப் பூனைக்காக ஒரு கூடையை வாங்குங்கள். அதில் மென்மையான துணியை விரித்துப் படுக்கை உருவாக்குங்கள். அதில்  தங்கவையுங்கள். அந்தக் கூடை, சுத்தமாகவும் பூனை தூங்குவதற்கு வசதியாக பெரியதாகவும் இருக்க வேண்டும்.

 பூனையின் நகங்களை நீளமாக வளரவிடக் கூடாது. அடிக்கடி வெட்டிவிடவும். இல்லையென்றால், நீங்கள் அன்பாகத் தூக்கும்போது நகத்தால் பிராண்டிவிடும்.

 சின்னச்சின்ன விஷயங்கள்கூட பூனையின் உடல்நிலையைப் பாதிக்கும். அதனால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டும்.

 மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பூச்சி மருந்தும், வருடத்துக்கு ஒரு முறை தடுப்பூசியும் போட வேண்டும்.

- தி.விக்னேஷ் ஓவியங்கள்: பிள்ளை

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நோபல் வின்னர்ஸ்!
வைரல் ஹிட்ஸ்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close