சீட்டைத் தேடி, பின்னம் கண்டுபிடி!

‘பின்னங்கள்’ பாடத்துக்கு உரியது.

பின்னம் பற்றியும், பின்னங்களில் உள்ள பகுதி, தொகுதி பற்றியும் மாணவர்களுக்கு முதலில் விளக்கிக் கூறினேன். பிறகு, இரண்டு பிளாஸ்டிக் ட்ரேயை எடுத்துக்கொண்டேன். பல்வேறு பின்னங்களை (எ-கா 2/6, 3/8) சார்ட்டில் எழுதி, ஒரு ட்ரேயில் போட்டேன். நிழல் இடப்பட்ட பாகங்களைக்கொண்ட, பல்வேறு வடிவங்களை சார்ட்டில் வரைந்து, மற்றொரு ட்ரேயில் போட்டேன். ஒவ்வொரு மாணவராக அழைத்து, முதல் ட்ரேயில் உள்ள ஏதாவது ஒரு பின்னத்தை எடுத்து, அதற்கேற்ற வடிவத்தை வரைந்து, வண்ணம் தீட்டச் சொன்னேன். பிறகு, அருகில் உள்ள மற்றொரு ட்ரேயில் நிழல் இடப்பட்ட பாகங்களைக்கொண்ட ஏதாவது ஒரு வடிவத்தை எடுத்து, அது குறிக்கும் பின்னத்தை எழுதச் சொல்லி, மதிப்பீடு வழங்கினேன். இந்தச் செயல்பாட்டைத் தொடர்ந்து செய்ததன் மூலம், பின்னங்கள் பற்றிய தெளிவு மாணவர்களிடம் காணப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்