ஆஹா... மோனலிசா

லியோனார்டோ டா வின்சி வரைந்த ‘மோனலிசா’ ஓவியத்தைச் சுற்றி எக்கச்சக்க சர்ச்சைகள். ஆளாளுக்கு அந்த ஓவியத்துக்கு ஒரு விளக்கம் சொல்வார்கள். டா வின்சி, தன்னையே ஒரு பெண்ணாகக் கருதி வரைந்த ஓவியம் என்பது அதில் ஒன்று. மோனலிசாவின் புன்னகையில் ஏதோ மர்மம் ஒளிந்திருக்கிறது எனவும் ஏகப்பட்ட கற்பனைகள், கட்டுக்கதைகள் உண்டு.

நீங்கள் யாரிடமும் இதுவரை சொல்லாத ஒரு ரகசியத்தையோ, ஏதோ தவறு செய்துவிட்டு மறைக்கும் விஷயத்தையோ நினைத்துக்கொண்டு, மோனலிசாவின் ஓவியத்தை உற்றுப் பாருங்கள். ‘உங்களால் ஏமாற்ற முடியாது, எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது’ என்பது போல ஓவியம் உங்களைப் பார்க்கும்.

 

சரி, இதெல்லாம் இப்போது எதுக்கு? இப்படிப் பலரையும் கவர்ந்த மோனலிசாவின் ஓவியத்தை, பல ஓவியர்கள் தங்களுக்குப் பிடித்த வகையில் வரைந்திருக்கிறார்கள். ‘டா வின்சி, மோனலிசாவை ஒழுங்காக வரையவில்லை, நான் மேலும் அழகாக வரையப்போகிறேன்’ என்றும், மோனலிசா நம் ஊரைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் எப்படி இருக்கும் என்றும், பல நாட்டினர் மோனலிசாவை வரைந்து தள்ளியிருக்கிறார்கள். இப்படி வரையப்பட்ட 300 மோனலிசா ஓவியங்களைத் தொகுத்து, ‘Mona Lisa Reimagined’ என்ற புத்தகமாக எரிக் மெஹல் (Erik Maell) என்பவர் தொகுத்து இருக்கிறார்.

ஆச்சர்யப்படவைக்கும் விதவிதமான மோனலிசாக்களை இந்த லிங்க்கில் சென்று பார்க்கவும். http://i2.wp.com/cdnw.vikatan.com/chutti/2013/11/zjexod/images/ch76h.jpg?resize=262%2C354

- சுப.தமிழினியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick