விழுந்து விழுந்து ஒரு சாதனை!

டோமினோ ஷோ (Domino Show) தெரியுமா ஃப்ரெண்ட்ஸ்?

குறிப்பிட்ட வரிசையில் அடுக்கப்பட்ட பொருட்களில், முதல் பொருளை கையால் தள்ளுவார்கள். ஒவ்வொன்றும் அடுத்தடுத்த பொருளின் மீது விழுந்தபடி, கடைசிப் பொருளை சாய்க்கும். டைல்ஸ், பிளாக்குகள், புத்தகங்கள் என டோமினோ ஷோவுக்குப் பயன்படுத்தும் பொருட்கள் பல வகைகள் உண்டு. அதிக அளவு பொருட்களைப் பயன்படுத்தி சாதனைகள் செய்ய, உலகெங்கும் உள்ள டோமினோ கலைஞர்களிடம் எப்போதும் போட்டிதான்.

சமீபத்தில், ஜெர்மனி நாட்டின் ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt) நகரில் நடந்த டோமினோ ஷோ, புதிய கின்னஸ் சாதனை படைத்தது. 9,821 புத்தகங்களால் செய்யப்பட முந்தைய சாதனையை முறியடிக்க, 10,200 புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில், ஸ்பெஷல் என்ன தெரியுமா? திருநெல்வேலிக்கே அல்வா என்பதுபோல, லேட்டஸ்ட் எடிஷனான ‘கின்னஸ் உலக சாதனைகள் 2016’ புத்தகங்களைப் பயன்படுத்தியே, இந்த கின்னஸ் சாதனையைப் படைத்தார்கள்.

இணையதளத்தில் https://youtu.be/PfU1GP7Au6k என சொடுக்கி, அந்த அழகுக் காட்சியை ரசியுங்கள்.

- கார்த்திகா முகுந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick