Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படிக்காதீங்க...படிக்காதீங்க!

‘‘இப்போ எல்லாம் ஹீரோவைவிட வில்லன்கள்தான் சீக்கிரம் ஃபேமஸ் ஆகறாங்க. ‘மங்காத்தா’ அஜீத், ‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி என நெகட்டிவ் ஆட்களைத்தான் ரசிக்கிறாங்க. நல்லதையே சொல்றதா இருந்தாலும் நெகட்டிவ் டோன்ல ஆரம்பிச்சு, எல்லோரையும் திரும்பிப் பார்க்கவெச்சு சொல்லணும்’’ என்றார் 11-ம் வகுப்பு படிக்கும் கீர்த்தனா.

‘‘நீங்க புரியாம முழிக்கிறது தெரியுது. ‘படிங்க, படிங்க’னு சும்மா சொல்லிட்டே இருந்தா, கடுப்பா இருக்கும். அதையே வேற மாதிரி சொல்றோம். எங்க வகுப்புக்கு வந்து பாருங்க”னு சொன்னார் ரசிகா.

அவர்களது வகுப்பறையில் நுழைந்தோம்.  கதைப் புத்தகங்களால் அந்த வகுப்பறையை மினி புத்தகத் திருவிழாவாக மாற்றி இருந்தார்கள். ‘படிக்காதீங்க’ என்று வகுப்பறைச் சுவர் முழுக்க ஒட்டி இருந்தார்கள். அதை எல்லாம் இங்கே கொடுக்கிறோம். நீங்களும் படிக்காதீங்க... படிக்காதீங்க ப்ளீஸ்!

 படிக்காதீங்க... தினமும் படித்தால், அதிக மதிப்பெண் வாங்கிடுவீங்க. செய்தித்தாளில் போட்டோ வரும். போட்டோவுக்கு சிரிக்கச் சொல்வாங்க. பேட்டி எடுப்பாங்க. அதனால, படிக்காதீங்க!

 ‘வெற்றி’ என்னும் சந்தோஷத்தைக் கொடுக்கும் படிப்பைப் படிக்காதீங்க!

 படிக்காதீங்க... தேர்வில் நல்ல மதிப்பெண் பெற மட்டும் படிக்காதீங்க!

 படிக்காதீங்க... எதையும் மேலோட்டமாகப் படிக்காதீங்க!

 படிக்காதீங்க... ‘கணக்கு, அறிவியல், வரலாறு’ என ஏட்டுப் படிப்பை மட்டும் படிக்காதீங்க!

 படிக்காதீங்க... மற்றவர்கள்  வற்புறுத்தலுக்காகப் படிக்காதீங்க, படிக்காதீங்க... படிப்பில் விருப்பம் இல்லாமல் படிக்காதீங்க!

 படிக்காதீங்க... படித்தால், சிந்தனை வரும். சிந்தித்தால், உயர்வு வரும். உயர்வு வந்தால், நாலு பேருக்கு உதவி கிடைத்துவிடும். படிக்காதீங்க!

 படிக்காதீங்க... படித்தால், மருத்துவர் ஆவீர்கள். பல உயிர்களைக் காப்பாற்றுவீர்கள். வியாதிகள் குறைந்துவிடும். படிக்காதீங்க!

 படிக்காதீங்க... படித்தால், புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவீங்க. வாழ்க்கை எளிமையாகிவிடும். படிக்காதீங்க!

 படிக்காதீங்க... கதைகள் படித்தால், கற்பனை வளம் வளரும். உங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் பல நடந்துவிடும். படிக்காதீங்க!

- ஐஸ்வர்யா, திவ்யதர்ஷினி, ராஜ்மி (11-ம் வகுப்பு)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
kaலக்kaல் கலர்ஸ்
36 வருடங்கள் 36ஆயிரம் பாம்புகள்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close