Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜோக்ஸ்

‘‘எல்லோரும் உன்னைவிட்டு விலகும்போது நீ புரிஞ்சிக்கோ...
குளிக்கணும்...
குளிக்கணும்...
குளிக்கணும்!”

- எம்.லோகேஷ் மேத்தா (VIII-B)

‘‘அமெரிக்காவில் பவர் கட் ஆனா, அவங்க EB-க்கு போன் பண்ணுவாங்க. ஜப்பானில் பவர் கட் ஆனா, ஃப்யூஸ் போயிருக்கானு செக் பண்ணுவாங்க. இந்தியாவில் பவர் கட் ஆனா, என்ன பண்ணுவாங்க தெரியுமா?’’
‘’முதல்ல, பக்கத்து வீட்டுலயும் பவர் போயிடுச்சானு செக்  பண்ணுவாங்க!’’


- எம்.லோகேஷ் மேத்தா (VIII-B)

அஜய்: ‘‘என்னோட சட்டையை டிட்டர்ஜென்ட் போட்டுத் துவைச்சதால சின்னதாப் போச்சு, என்ன பண்றது?”
சுரேஷ்: ‘‘அந்த டிட்டர்ஜென்ட்டைப் போட்டு நீ ஒரு முறை குளிச்சாப் போச்சு!’’


- சு.பாவனா (VIII-A)

ஆசிரியர்: ‘‘பழைய காலத்து உயிரினம் ஒண்ணு சொல்லு?’’
மாணவி: ‘‘ஜீப்ரா’’
ஆசிரியர்: ‘‘அது எப்படி?’’
மாணவி: ‘‘ஏன்னா, அதுதான் Black and White-ல் இருக்குதே!”


- சு.பாவனா (VIII-A)

செக்கிங் ஆபீசர்: ‘‘ஏன்டா, திருட்டு ரயில் ஏறி வந்தே?’’
ஒருவர்: ‘’இது திருட்டு ரயில்னு சத்தியமா தெரியாது சார்.’’


- எம்.லோகேஷ் மேத்தா (VIII-B)

அப்பா: ‘‘டெஸ்ட்டுல எப்படிடா எழுதுனே?’’
மகன்: ‘‘அஞ்சு கேள்வி கேட்டிருந்தாங்க. முதல் கேள்வி தெரியல, இரண்டாவது கேள்வி புரியல, மூணாவது கேள்வி சரியில்ல, அஞ்சாவது கேள்வி மறந்துடுச்சு!’’
அப்பா: ‘‘அப்ப நாலாவது கேள்வி?’’
மகன்: ‘‘அதை சாய்ஸ்ல விட்டுட்டேன்பா!’’

டாக்டர்: ‘‘என்னங்க... எக்ஸ்ரே-ல பார்த்தால், உங்க வயித்துல சின்னச் சின்ன கரண்டிகளா இருக்கு?’’
வந்தவர்: ‘‘மருந்து கொடுத்தப்ப, நீங்கதானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க?’’


 - எம்.லோகேஷ் மேத்தா(VIII-B)

 
‘‘டாக்டருக்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்?’’
‘‘கடவுளுக்கு நம்மைப் பிடிக்கலேன்னா, டாக்டர்கிட்டே அனுப்புவாரு. டாக்டருக்கு நம்மைப் பிடிக்கலேன்னா, கடவுள்கிட்டே அனுப்புவாரு!’’


- ஆர்.ஸ்ரீமதி (VIII-B)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
புதிரோடு விளையாடு!
பக்கா மாஸ் லாரன்ஸ் கதை!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close