Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பஞ்சு பஞ்சா பஞ்ச்!

 ‘‘சினிமா ஹீரோக்கள்தான் பஞ்ச் டயலாக் பேசணுமா? நாங்க பேசினா கேட்க மாட்டீங்களோ?’’ எனக் கையைப் பிடிச்சு இழுத்து, தெறிக்கத் தெறிக்க பஞ்ச் பேசும் ஒரு கேங், எங்க ஸ்கூலில் இருக்கு. இதோ, அவங்க உங்களை நோக்கி வர்றாங்க...  

 மதியம் சாப்பிடுறது லன்ச்;‘நச்’னு சொன்னாதான் பஞ்ச்!

 வாழ்க்கையில் எதுவும் ஈஸி இல்லை; முயற்சி செஞ்சா எதுவும் கஷ்டம் இல்லை!
 
 நான் படிக்கப் போறேன் இயல்-1; என் கையில இருக்கு ரீஃபில் பென்!
 
 எனக்குப் பிடிக்கும்  நடிப்பு; கிருஷ்ணசாமியில் கிடைக்கும் படிப்பு!

 எங்க அப்பா படிச்சது Municipality;எங்க ஸ்கூலில் பிடிச்சது punctuality!

 விராட் கோலி அடிச்சா சிக்ஸ்;சளி புடிச்சா தடவுவோம் விக்ஸ்!

 பணத்தை மட்டும் கரெக்ட்டா பேங்கில் போடுறீங்க; குப்பையை குப்பைத் தொட்டியில் போட்டா என்ன?

 கடல்ல இருக்குது முத்து; ஆசிரியர்கள்தான் எங்க சொத்து!

 கல்யாணத்துல வைப்பாங்க பேனரு; இங்கிலீஷ்ல இருக்கு கிராமரு!

 மரத்துல சுத்திக்கிட்டு இருக்கிறது கொடி; வீட்டுல பேரன்ட்ஸ் சொல்றபடி படி!

 வாழ்க்கை இருந்தால் போர் அடிக்கும்; வழுக்கை இருந்தால்  கிளார் அடிக்கும்!

 வெளிக் கண்ணீரைத் துடைப்பது கர்ச்சீஃப்; மனக் கண்ணீரைத்  துடைப்பது ஃப்ரெண்ட்ஷிப்!

- இ.எஸ்.ஜனா, வி.சி.மணிபாலன், சி.வெங்கடேசன், ஜீ.வேலன், எஸ்.ஆர்.விஜய், அ.சந்தீப், எஸ்.க்ரிதீஷ், பிரதிக்‌ஷ், எஸ்.சித்தார்த்தன், ஆர்.வெங்கட்ராமன், எ.பிரின்ஸ் குமார், ஆர்.லோகேஷ்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
எப்படி உருவாக்குவது 3D ஹோலோகிராம்?
விழுந்து விழுந்து ஒரு சாதனை!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close