நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

‘‘உங்களில் யாரெல்லாம் சுட்டி விகடன் படிக்கிறீங்க?”

ஒரு நாள், திடீரென வகுப்புக்குள் நுழைந்த பள்ளி முதல்வர் இப்படிக் கேட்டதும் நிறையப் பேர் கைகளை உயர்த்தினோம்.

“இவ்வளவு நாள் வாசகர்களாக இருந்து சுட்டி விகடனைப் படிச்சு இருப்பீங்க. இப்போ, அந்தச் சுட்டி விகடன் இதழையே  நீங்கதான் தயாரிக்கப்போறீங்க. நீங்கதான் ரிப்போர்ட்டர், நீங்கதான் எடிட்டர். இன்னும் இரண்டு நாட்களில் சுட்டி விகடனில் இருந்து வருவாங்க. அதுக்குள்ளே நீங்க ஒரு எடிட்டோரியல் குழுவை உருவாக்குங்க. நம்ம ஸ்கூல் மாணவ, மாணவிகளிடம் பேசுங்க. அவங்க சொல்லும் ஐடியாஸை வெச்சு, என்னவெல்லாம் செய்யலாம்னு முடிவு பண்ணுங்க. உங்களுக்கு உதவியா, நம்ம பள்ளி ஆசிரியர்கள் சிலரும் இருப்பாங்க. இப்போ, இந்த நிமிஷமே களத்தில் இறங்குங்க’’ என்றார் முதல்வர்.

அடுத்த இரண்டாவது நாளில் எங்க பள்ளிக்கூடமே மாறிப்போச்சு. யாரைப் பார்த்தாலும் ‘நல்லாப் பார்த்துக்கங்க நானும் ஜர்னலிஸ்ட்தான்’ எனச் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. எங்களுக்குள் ஒரு எடிட்டோரியல் குழு ரெடி. ஒவ்வொரு வகுப்பாகப் போய், ஒவ்வொரு மாணவரிடமும் பேசி, ஐடியாக்களை எழுத ஆரம்பிச்சோம்.

சென்னையில் இருந்து சுட்டி விகடன் ஆசிரியர் குழு வந்தபோது, எங்கள் பள்ளி ஆடிட்டோரியம் மாணவ ஜர்னலிஸ்ட்டுகளால் நிரம்பிவழிந்தது. எங்கள் ஐடியாக்களை எல்லாம் பார்த்தாங்க. அவங்களோடு சேர்ந்து பரபர என வேலையில் இறங்கினோம். கலெக்டர் சந்திப்பு, பார்வையற்றோர் பள்ளி விசி்ட், பாம்பு மனிதர் பூனம் சந்த் பேட்டி என அவுட்டோர் ஐடியாக்களோடு சுட்டி ரிப்போர்ட்டர்கள் கிளம்பினார்கள். கிளாஸ் ரூம் டெக்ரேஷன், ஒரு நாள் ஆசிரியர், ஆர்ட், கிராஃப்ட் என ஒரு குழு இண்டோரில் அதகளம் பண்ண ஆரம்பிச்சாங்க.

இரண்டு நாள் உற்சாகத் திருவிழாவாக எல்லா ஐடியாக்களையும் முடிச்சு, ரிப்போர்ட்டிங் எழுதினோம். அதோடு எங்க வேலை முடியலை. சென்னையில் உள்ள சுட்டி விகடன் அலுவலகத்துக்கு விசிட் அடித்தோம். நாங்க ரிப்போர்ட் பண்ணிய மேட்டர்களை நாங்களே லே அவுட் செய்தோம். இப்போ, உங்க கையில் இருக்கிற இந்த சுட்டி விகடன், முழுக்க முழுக்க எங்கள் எண்ணத்திலும் கைவண்ணத்திலும் உருவானது.

எப்படி இருக்கு ஃப்ரெண்ட்ஸ்?

- சுட்டி எடிட்டோரியல் குழு: அகர முதல்வன், நரேன் ரிச்சர்ட், வெங்கட்ரமணன், மகேஷ், சுபிக்‌ஷா, பவதாரிணி, ஆதீஸ்வரன், அஃப்ரோஸ், ஆஃப்ரின், கீர்த்தனா, ப்ரித்தி, அர்ஷயா.

ஒருங்கிணைப்பு: சு.கற்பகம், மு.ஜெயராஜ்,

படங்கள்: எஸ்.தேவராஜன், தே.சிலம்பரசன், அ.குரூஸ்தனம்

அட்டைப் படம்: கே.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick