உள்ளம் கவர்ந்த ரோஜாக்கள்!

ங்கள் வாழ்க்கையிலேயே ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்ட நாள் இது.

நாங்க பள்ளிக்கு வரும் வழியில்தான், ‘பார்வையற்றோருக்கான அரசு ஆரம்பப் பள்ளி’ இருக்கு. தினமும் அவர்களைப் பார்ப்போம். அந்த மாணவர்களோடு பேச வேண்டும், அவர்களோடு சேர்ந்து விளையாட வேண்டும், சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்னு மனசுல நினைச்சுக்குவோம். ஆனா முடியாது. ஒரு நாள் அந்தப் பள்ளிக்குச் சென்றோம். பள்ளியின் தலைமையாசிரியர் சந்தோஷமா வரவேற்றார்.  மாணவ, மாணவிகளை மைதானத்துக்குக்   கூட்டிட்டு வந்தார்.

‘‘உங்களுக்கு நாங்க நியூஸ் வாசிச்சுக் காட்டட்டுமானு”னு கேட்டு, அன்றைய செய்தித்தாளைப் படிச்சுக் காட்டினோம்.

‘‘எங்க புத்தகத்தை நாங்க படிச்சுக் காட்டுறோம். நீங்க கேட்கிறீங்களா?’’னு சொல்லி ஒரு மாணவி, பிரெய்ல் புத்தகத்தை விரல்களால் வாசித்துக் காட்டினார்.

ரோஜா என்ற சிறுமி, பெயரைப் போலவே ரொம்ப க்யூட்.  ‘தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே’ என்ற பாடலை ஆரம்பிக்க, ரோஜாவோடு சேர்ந்து எல்லா குழந்தைகளும் பாடத் தொடங்கினார்கள். இந்தப் பாடலைக் கேட்டதும் 10 ஐஸ்கிரீம் ஒண்ணா சாப்பிட்ட மாதிரி மனசு உருகியது.

சினிமா, கதை, விளையாட்டுனு ஒரு மணி நேரம் ஓடிடுச்சு. அந்த நேரத்துல ஒரு விஷயத்தை  நல்லா  புரிஞ்சிக்கிட்டோம். அவங்களுக்கு பார்வை மட்டும்தான் இல்லை. மற்ற திறமைகளில் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை.

- ஜெ.நாகேஸ்வரன்,  எஸ்.தினா, ஆர்.கீர்த்தனா,  எஸ்.கீர்த்தனா, ஆர்.சுரேஷ்குமார்,  வி.எஸ்.ராஜ் கிருஷ்ணா, பி.பவதாரிணி, எஸ்.ப்ரீத்தி, வி.ஜாய்சன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick