சல்யூட் ஃப்ரெண்ட்ஸ்!

சல்யூட் ஃப்ரெண்ட்ஸ்!

ங்கள் பள்ளியில் சாரணர், ஜெ.ஆர்.சி, என்எஸ்எஸ், தேசிய பசுமைப் படை என எல்லா  இயக்கங்களிலும் ஈடுபடுகிறோம். மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு என ஆண்டு முழுவதும் பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். எங்கள் பகுதியில் நீண்ட நாட்களாகப் பராமரிப்பு இல்லாமல் இருந்த குளத்தைத் தூர் வாரினோம்.  இப்போது அதில் நிரம்பிவழியும் நீரைப் பார்க்கும்போதெல்லாம் பெருமிதமாக இருக்கிறது. 

சலாம் ஃப்ரெண்ட்ஸ்!

ஜான்சி ராணி, சுபாஷ் சந்திர போஸ், ஆல்பிரட் ஐன்ஸ்டீன், காரல் மார்க்ஸ், விவேகானந்தர், பாவேந்தர், நியூட்டன், ஷேக்ஸ்பியர், சத்தியமூர்த்தி, குமரன்... இவங்களுக்கும் இங்கே இருக்கிற எங்க நண்பர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. என்ன தெரியுங்களா? அந்தச் சாதனையாளர்களின் பெயர்களைத்தான் இவர்களுக்கு வைத்திருக்கிறார்கள்.

சபாஷ் ஃப்ரெண்ட்ஸ்!

ந்த மரத்துக்கு ஒரு கதை இருக்கு! 2011-ம் ஆண்டு ‘தானே புயல்’ ஆடிய கோரத் தாண்டவத்தில், ஊரே கண்ணீரில் திகைத்து நின்றது. அப்போது களத்தில் இறங்கிய விகடன் நிறுவனம், பல்வேறு நிவாரணப் பணிகளைச் செய்தது.  அதில் ஒன்று, ஒரு லட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டம். முதல் மரக் கன்றை, விகடன் நிர்வாக இயக்குநர்    பா.சீனிவாசன், எங்கள் பள்ளியில் தொடங்கினார். நாங்கள் அதை, கண் போல  கவனித்து வளர்த்து வருகிறோம்.  இதுதான் அந்த மரம். இதன் பெயர் விகடன் மரம்!   

- அஃப்ரோஸ் ஆஃப்ரின்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick