பாசத்தில் கிழியும் சட்டை!

த்தாம் வகுப்புப் படிக்கும் விஷ்ணுவர்த்தன், எங்கள் பள்ளியில் ரொம்ப ஃபேமஸ். எதுக்கு தெரியுமா?

“மூணு வருஷத்துக்கு முன்னாடி, எங்க பாட்டி வீட்டுக்கு போயிருந்தேன். அங்கே, அழகழகா நாய்க்குட்டிங்க இருந்துச்சு.  அதுல ஒண்ணை வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தேன். அதுக்கு, ‘ஸ்மூத்தி’ன்னு பேர் வெச்சு வளர்த்தேன். ஒரு நாள், எங்க வீட்டுக்குள்ளே பாம்பு பூந்துடுச்சு. நாங்க தெறிச்சி ஓடினோம். ஆனா, ‘ஸ்மூத்தி’  அந்தப் பாம்புக்கிட்டே  சண்டை போட்டு கடிச்சி விரட்டிச்சி. அதுல இருந்து  இன்னும் நெறைய நாய்கள் வளர்க்கும்  ஆர்வம் வந்துச்சு’’ என்கிறார் விஷ்ணு வர்த்தன்.

டாபர்மேன், லேபர் டாக், நாட்டு நாய், புறாக்கள் என  வரிசையாக வாங்கி வளர்க்க ஆரம்பித்து விட்டார்.

‘‘நான் ஸ்கூல் விட்டு வந்தா, அவ்ளோ  சீக்கிரம் வீட்டுக்குள்ளே  நுழைஞ்சுட முடியாது. எல்லாரும் ஒண்ணு சேர்ந்து, என் மேலே விழுந்து புரண்டு ஒரு வழி பண்ணிடுவாங்க. இவங்களால எனக்கு ஏகப்பட்ட சட்டைங்க கிழிஞ்சு இருக்கு. ஆனா, அதைப் பெருசா நினைச்சதே இல்லை. பாசத்துல கிழியாத சட்டை எங்கே இருக்கு?’’ என்ற விஷ்ணுவர்த்தன் மீது செல்லமாகப் பாய்ந்தது ஸ்மூத்தி.

- கா.ரூபியா,  ல.விஷ்ணுப்ரியா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick