சந்தோஷத் தோட்டம்!

‘சின்ன வயசுல இருந்தே பூச்செடி வளர்க்கிறதுனா எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்கிற சைலேந்திர ராம், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.

அவரை நாங்க ‘மாடித் தோட்ட மன்னன்’னு செல்லமா அழைப்போம்.காய்கறித் தோட்டமே அவர் வீட்டு மாடியில இருக்கும்.

‘‘எங்க அத்தை வீட்டுல நிறைய பூச்செடிங்க, காய்கறிச் செடிங்க இருக்கு. ‘செடிகளும் குழந்தைங்க மாதிரிதான். அதை நல்லா கவனிச்சுக்கணும்’னு சொல்வாங்க. அதைப் பார்த்துதான் எனக்கும் மாடித் தோட்டம் போடணும்னு ஆசை வந்துச்சு. அம்மாகிட்டே சொல்லி இந்தத் தோட்டத்தை அமைச்சேன். மாடித் தோட்டம் மூலமா காய்கறி வளர்க்க அத்தையும் எனக்கு உதவினாங்க. நாம வளர்க்கிற செடி, கொடிகள்ல காய்ச்ச காய்கறிகளை சமைக்கும்போது, நல்ல மணமும் சுவையும் இருக்கும்’’ என்கிற சைலேந்திர ராம், மாடித் தோட்டம் பற்றி சொன்ன டிப்ஸ்...

 மாடித் தோட்டத்துக்கு நாட்டுக் காய்கறிகள்தான் சிறந்தவை. வெண்டைக்காய், மிளகாய், கொத்தவரங்காய் மாதிரி காய்களை சின்னச்சின்ன பைகள்ல விதைக்கணும்.

 அவரை, பூசணி, புடலங்காய், பாகற்காய்களை பெரிய பை அல்லது வாளிகளில் நடலாம். கொய்யா, மாதுளை, சப்போட்டா மாதிரி பழச் செடிகளை பெரிய பைகளில் வளர்க்கணும்.

 கேக் வடிவத்துல கிடைக்கிற தேங்காய் நார்க் கழிவையும், காய்ஞ்ச மாட்டுச் சாணத்தையும் உரமாப் பயன்படுத்தலாம். செம்மண் ஒரு பங்கு, மணல் ஒரு பங்கோட தேங்காய் நார்க் கழிவு ரெண்டு பங்கு இட்டு, தொட்டியை நிரப்பணும். காய்கறிக் கழிவுகள், முட்டை ஓடுகளை பிளாஸ்டிக் டப்பாவில் மக்கவைத்து, செடிகளுக்குப் போடணும்.

 15 நாட்களுக்கு ஒரு முறை, ஐந்து மில்லி வேப்பெண்ணெயை, ஒரு லிட்டர் தண்ணீர்ல கலந்து செடிகள்ல தெளிக்கணும். பஞ்ச கவ்யமும் இடலாம்.

- ப்ரீத்தி, ஆரூண்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick