ஒற்றுமை கீதம்!

வ்வொரு வருடமும் எங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில், ஹைலைட் விஷயம் ஒன்று இருக்கும். இந்த வருடம் நாங்கள் தேர்ந்தெடுத்தது, அண்டை நாடுகளின் தேசியகீதம் (Anthem Of Neighbouring Countries).

இந்தியா, பூட்டான், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய 9 நாடுகளின் தேசியகீதங்களை, இணையத்தில் இருந்து டவுண்லோடு செய்தோம். எங்கள் பாட்டு ஆசிரியர் எட்வினா, ஒவ்வொரு நாட்டின் தேசியகீதத்துக்கும் ஒரிஜினல் மெட்டு மாறாமல் இசை அமைத்தார். 25 நாட்கள் பயிற்சி எடுத்து, 9 நாடுகளின் தேசியகீதங்களையும் பிழையில்லாமல் கற்றோம். அந்தப் பாடல்களின் பொருளையும் தெரிந்துகொண்டோம். நம் நாட்டு தேசியகீதம் பாடும்போது அட்டென்ஷனில் நிற்க வேண்டும் என்பது விதிமுறை. அதுபோல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதிமுறை இருக்கிறது. அந்த விதிமுறைகள் மாறாமல் மேடையில் பாடினோம். கூட்டம் முழுவதும் எழுந்து நின்று கை தட்டியது.

ஒவ்வொரு நாட்டு மக்களின் ஆடைகள், உணவுப் பழக்கம், கலாசாரம் வேறுபட்டாலும் எல்லோரும் மனிதர்களே. எல்லா நாட்டின் தேசியகீதங்களும் வலியுறுத்துவது அன்பு மற்றும் ஒற்றுமையையே. இதை, ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு வாழ்க்கையில் கடைப்பிடித்தால், ‘வன்முறை, போர்’ என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

- கே.திவ்யதர்ஷினி, பி.பவதாரிணி, சி.வி.ரஷ்மி, எஸ்.கீர்த்தனா,  எம்.என்.ஐஸ்வர்யா, ஆனந்தவள்ளி, எஸ்.கீர்த்தி குமார், பி.சாந்தினி, ஆர்.ஜி.முரளிதரன், ஆர்.ஜி.அரவிந்த், என்.பரணிதரன், பால வெங்கடரமணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick