ஒரு தேதி...ஒரு சேதி!

தினந்தோறும் புதிய செய்தியைக் கேட்டு, அந்த நாளைத் தொடங்குவோம். நாம் சந்திக்கும் நண்பர்களிடம் அந்தச் செய்தியைக் கூறி மகிழ்வோம்.

திலகர்: இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனித்த இடத்தைப் பிடித்தவர், பால கங்காதர திலகர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவரால், தன் நாடு அடிமைப்பட்டுக் கிடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நண்பர்களோடு இணைந்து, இரண்டு பத்திரிகைகளை நடத்தி, மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டினார். ஆங்கிலேயே அரசால் சிறைப்படுத்தப்பட்டு, பல கொடுமைகளுக்கு உள்ளானார். ஆனாலும், சுதந்திர தாகம் தீராமல் சுதேசி இயக்கத்தை முன்னெடுத்தார். இவரின் தியாக வாழ்க்கையை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்

ஸ்டீவ் ஜாப்ஸ்: தகவல் தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இவர், படிக்கும் காலத்தில் படிப்பில் புலி இல்லை. கல்லூரிப் படிப்பில் பாதியிலேயே விலகியவர். காலி பாட்டில்களை விற்று, நண்பர்களின் வீட்டு மொட்டைமாடியில் தங்கிக்கொண்டார். ஆனாலும், எந்த நிலையிலும் உழைப்பையும் விடாமுயற்சியையும் விட்டுவிடவில்லை. அந்த உழைப்புதான்     ‘ஐ போன்’ என்றதும் இவரின் பெயரை நினைவுக்கு வரவைத்தது. அது, எப்படி நடந்தது என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா?

அப்துல் கலாம்: மாணவர்களை நேசித்த அற்புதமான விஞ்ஞானி. அறிவியலாளராகத் தன் பணியைத் தொடங்கிய கலாம், இந்தியாவின் முதல் குடிமகனாகவும் பதவி வகித்துப் பெருமை சேர்த்தார். எந்தப் பதவியில் இருந்தாலும் மாணவர்களைச் சந்திப்பதையும், அவர்களோடு உரையாடுவதையும் நிறுத்தவில்லை. அவர்களே இந்த நாட்டை வளமாக்கப்போகிறவர்கள் என உறுதியாக நம்பினார். அவர்களுக்காக இயங்கிய அப்துல் கலாம் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான செய்திகளை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick