ஒரு மனிதன்... 422மரங்கள்!

ம் பூமியில் மொத்தம் எத்தனை மரங்கள் உள்ளன தெரியுமா? 3.04 டிரில்லியன். அதாவது 3,040,000,000,000 மரங்கள்.

பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்த சர்வதேசக் குழு ஒன்று, தனது ஆய்வின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. பூமியில் ஏறத்தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மரங்களின் எண்ணிக்கையில் 46 சதவிகிதமே தற்போது  உள்ளதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது.

மனித இனத்தால் ஆண்டுக்கு 15 பில்லியன் (1,500 கோடி) மரங்கள் வெட்டப்படுகின்றன. ஆனால், 500 கோடி மரங்களே நடப்படுகின்றன. இதனாலேயே மரங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துவருகிறதாம்.

இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளைவிட, இந்த ஆய்வு சரியான முடிவுகளைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அதாவது, பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் 422 மரங்கள் என்ற கணக்கில்தான் உள்ளன. ஆனால், பெருகும் மக்கள்தொகைக்கு இது போதாது.

உங்கள் வீட்டில் இடம் இருந்தால், ஒரு மரக்கன்றாவது நட்டுப் பராமரித்து வளருங்கள். பள்ளியில், பொது இடங்களில் என வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் புதிய மரக்கன்றுகளை நடலாம்.

நம் நிலப் பகுதி, இங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வளரும் மரங்களை நடவும். அழகுக்காக என பயனற்ற அலங்காரச் செடிகளை வளர்க்க வேண்டாம்.

54 கிலோ செய்தித்தாள்களை மறு சுழற்சி செய்வதன் மூலம் ஒரு மரத்தைக் காக்கலாம். தேவையிருந்தால் மட்டும் ப்ரின்ட்டரைப் பயன்படுத்தவும். காகிதத்தைச் சிக்கனம் செய்வது, மரத்தைக் காப்பதாகும்.

இன்று நம்மை காக்கும் மரங்கள், நாளை நம் தலைமுறையைக் காப்பது நம் செயல்பாடுகளில்தான் உள்ளது.

- கார்த்திகா முகுந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick