உலகம் சுற்றிய டுரானர்!

டுரானர் பிளானெட் சோலார் (Turanor planet solar) என்ற படகு, தற்போது உலக அளவில் மிகவும் பிரபலம். அந்தப் படகு பற்றிய ஜிலீர் தகவல்கள்...

 முழுக்க முழுக்க சூரிய சக்தியிலேயே இயங்கி, உலகைச் சுற்றி வந்த  முதல் படகு இது. 

 584 நாட்களில் உலகைச் சுற்றி வந்த டுரானர், 28 நாடுகளில்... 52 நகரங்களில் தங்கிச் சென்றது.

 இந்தப் படகின் எடை 89,000 கிலோ. கப்பலின் மேல் தளம் முழுக்க 5,500 சதுர அடிகளுக்கு, சூரிய ஒளியை உட்கிரகிக்கும் தகடுகளும், 8,500 கிலோ பேட்டரிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

 படகின் மேற்புறம் உள்ள ஒளித் தகடுகளை, பயணம் செய்யும்போது சூரிய ஒளி விழும் திசைக்கு ஏற்ப  சாய்த்துக்கொள்ளும் விதமாக வடிவமைத்துள்ளனர்.

 எதிர்காலத்துக்குரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தும் வகையில், போக்குவரத்து வாகனங்களை வடிவமைக்க ஏற்ற உந்து சக்தியை இந்தப் படகு ஏற்படுத்தி இருக்கிறது.

 டுரானர் என்றால், எல்விஷ் மொழியில் ‘சூரியனின் சக்தி’ என்று பொருள். அதென்ன எல்விஷ் மொழி? ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்,’ ‘ஹாபிட்’ போன்ற கதைகளில்... கதாபாத்திரங்கள் பேசுவதற்காக ஜே.ஆர்.ஆர் டோல்கீன் உருவாக்கிய மொழிதான் எல்விஷ்.

- சுப.தமிழினியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick