ஆஹா ஐன்ஸ்டீன்!

ல்பர்ட் ஐன்ஸ்டீன் உருவாக்கிய சார்பியல் கொள்கையின் நூறாவது ஆண்டு, 2015-ல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஐன்ஸ்டீன் பற்றிய சில துளிகள்...

‘ ‘கற்பனை, அறிவைவிட முக்கியமானது” என்றார். மனிதன் செய்யும் கற்பனைதான் பல்வேறு அறிவியல் விஷயங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தன என்பது அவரது உறுதியான நம்பிக்கை.

 மார்ச் 14, 1879-ல் ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். குழந்தையாக இருந்தபோது, கற்பதில் மந்தமாக இருந்தார். இவர் பேசத் தொடங்கியது நான்காவது வயதில்தான். சிறு வயதில் இருந்தே கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கினார். அதீத ஆர்வத்துடனும் பகுத்து ஆராயும் குணத்துடனும் வளர்ந்தார்.

 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘ஐ க்யூ’  160. பொதுவாக, 120 முதல் 129 வரை இருப்பது அதிகபட்ச திறனாகக் கருதப்படுகிறது.

 ‘‘கற்பனை, அறிவைவிட முக்கியமானது” என்றார். மனிதன் செய்யும் கற்பனைதான் பல்வேறு அறிவியல் விஷயங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தன என்பது அவரது உறுதியான நம்பிக்கை.

 கார் வைத்திருந்தது இல்லை. கார் ஓட்டக் கற்கவும் இல்லை. தமது மிதிவண்டியையே பயன்படுத்துவார்.

 பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால், மறு வருடம் விண்ணப்பிக்க நேர்ந்தது.

 ஐன்ஸ்டீனுடைய கண்கள், நியூயார்க் நகரத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

 இவர் ஞாபக மறதிக்காகவும் புகழ்பெற்றவர். பெயர்கள், தேதிகள், தொலைபேசி எண்கள் எதையும் நினைவுபடுத்திக்கொள்ளத் திணறுவார்.

 சராசரி மனிதனின் மூளை மடல் (parietal lobe) அளவைவிட இவரது மூளை மடல் 15 சதவிகிதம் பெரியது. ஐன்ஸ்டீன் இறந்ததும், அவரது மூளை அகற்றப்பட்டடு, அதன் சில பகுதிகள்  மே 2015-ல், பிலடெல்ஃபியாவில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

 ஐன்ஸ்டீனுடைய சார்பியல் கொள்கைக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை... இயற்பியல் சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளுக்காக, இவருக்கு 1921-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 காலுறைகள் அணிவதை இவர் விரும்பியதே இல்லை.

 ஐன்ஸ்டீன், வயலின் வாசிப்பதில் சிறந்து விளங்கினார்.

 இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதி பதவி இவரைத் தேடி வந்தது. அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

- கார்த்திகா முகுந்த்
ஓவியங்கள்: பிள்ளை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick