அடிச்சுக்குவோம்... அணைச்சுக்குவோம்!

ண்ட்ராய்டு இல்லாத ஸ்மார்ட்போன் கூட இருக்கலாம். ஆனா, சண்டை போட்டுக்காத பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் உண்டா? ‘‘அடிச்சுக்கிறதும் அடுத்த நிமிஷமே அணைச்சுக்கிறதும் எங்களுக்குள்ள சகஜம்’’ என்கிற இந்த செல்லச் சண்டைக்காரர்கள், தங்களின் போர் வரலாற்றைச் சொல்கிறார்கள்.

‘‘ன்னை தினமும் சீண்டாட்டி என் தங்கச்சி மிதுன்யாவுக்கு தூக்கமே வராது. இவள் தலைமுடி கிராப். அதனால, என் தலைமுடி மேலேயே கண். சண்டை வந்துட்டா, முடியைப் பிடிச்சு இழுத்து அலறவைப்பா. நான் கையை ஓங்கினாலே, அடிச்சுட்ட மாதிரி கதறுவா. ‘அவ சின்னப் பொண்ணு, நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்’னு எல்லோரும் இவளுக்கு சப்போர்ட். வீட்டுக்கு பெரியவளாப் பொறந்தது அவ்ளோ பெரிய குற்றமா?” எனப் புகார் பட்டியலை முடிக்கும் முன்பே, தியாவின் கன்னத்தில் பச்சக் என முத்தம் கொடுத்தாள் மிதுன்யா.

‘‘செய்றது எல்லாம் செஞ்சுட்டு இப்படித்தான் ஐஸ் வெச்சு ஆஃப் பண்ணுவா” எனத் தங்கையைத் தூக்கிக் கொஞ்சுகிறார் தியா.

‘‘ண்ணா, ரெண்டா... நாங்க இதுக்குத்தான் சண்டை போடுவோம்னு காரணத்தைச் சொல்லவே முடியாது. எல்லாத்துக்கும் அடிச்சுப்போம்” என்று பெருமையோடு(?) ஆரம்பித்தார் தங்கை ஸ்ரேயா.

‘‘எனக்கு ஹிந்தி படம் பிடிக்கும். ஆனா, இவள் கார்ட்டூன் பார்க்கணும்னு ரிமோட்டைப் பிடுங்குவா. அப்படி ஆரம்பிக்கும். காரில் போகிறப்ப முன்னாடி ஸீட்டுக்கு, வீட்டில் சாப்பிட உட்காரும் இடம் என எல்லாத்துக்கும் சண்டைதான். அதெல்லாம் கொஞ்ச நேரம்தான். ‘இந்த டிரெஸுக்கு இந்தச் செருப்பு போடு’, ‘இப்படி ஹேர் ஸ்டைல் பண்ணிக்க’னு ஒருத்தருக்கு ஒருத்தர் நிறைய டிப்ஸ் கொடுத்துப்போம். சண்டைனு வந்துட்டா, யார் ஜெயிக்கிறோம்கிறது முக்கியம்’ என்று சிரிக்கிறார் அக்கா ஸ்வேதா.

ரும்போதே, அக்கா நர்மதாவிடம் சண்டை போட்டுக்கொண்டுதான் வந்தான் நந்தகுமார். ‘‘ ‘போட்டோ எடுக்கப்போறாங்க, அப்படியே வர்றியே. தலையைச் சீவுடா, சட்டையைச் சரியா போடுடானு’னு ஒரே அட்வைஸ். இப்பிடித்தான் என்னோட எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைச்சு சண்டையை ஆரம்பிப்பா” என்றான்.

‘‘இவன் மட்டும் என்னவாம்? எப்படா என்னைப் பத்தி அம்மாகிட்டே போட்டுக்கொடுக்கலாம்னு காத்திருப்பான். ‘அம்மா, தண்ணியைச் சிந்திட்டா, உப்பைக் கொட்டிட்டா’னு வாட்ஸ் அப்பைவிட வேகமா தகவல் சொல்லுவான். ஆனாலும், நந்தா என் செல்லம்’’ என்று நர்மதா சொன்னதும், பாசப் பறவைகளாக மாறினார்கள் இருவரும்.

‘‘நாங்க ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து சண்டை போடுறவங்க. நான் என்ன செய்றேனோ, அதையே இவளும் செய்யணும்னு வருவா. நான் டி.வி பார்த்தா, இவளும் பார்க்கணும். பொம்மையை எடுத்தால், இவளும் எடுப்பா. ஒரு நாள் ஜலதோஷம்னு ஆவி பிடிச்சுட்டு இருந்தேன். இவளும் பிடிக்கிறேன்னு போர்வையை இழுக்க, சுடு தண்ணியைக்  காலில் கொட்டிக்கிட்டேன்” என்றான் ஜெய்கிருஷ்ணன்.

‘‘அதான் அப்பவே ஸாரி சொன்னேன். மருந்து தடவிட்டு படுத்திருந்தப்ப சாப்பாடு ஊட்டிவிட்டேன்ல. அதை ஏன் கம்ப்ளெய்ன்ட் பண்றே”னு இடுப்பில் கை வைத்துக்கொண்டு முறைத்த தனுயை அலேக்காகத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான் ஜெய்.

- கு.அனுஷ்யா
படங்கள்: க.சத்தியமூர்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick