வைக்கோல் திருவிழா!

மாத்தி யோசி... மகிழ்ச்சி கிடைக்கும். உலகமும் கவனிக்கும்’ என்கிறார்கள் ஜப்பான் விவசாயிகள்.

ஜப்பானின் மாநிலங்களில் ஒன்று, நிகாடா (Niigata). ஜப்பானின் மிக நீளமான தீவும்கூட. இங்கே, ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் ‘வாரா ஆர்ட் ஃபெஸ்ட்டிவல்’ (Wara Art Festival) என்கிற வைக்கோல் உருவத் திருவிழா, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை வரவைக்கிறது.

இங்குள்ள விவசாயிகள், நெல் அறுவடை முடிந்ததும் குவியும் வைக்கோலை மொத்தமாக எரிப்பார்கள். இதனால், சுற்றுச்சுழல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. என்னதான் செய்யலாம் என யோசித்தபோது தோன்றியதுதான், இந்த வைக்கோல் உருவத் திருவிழா.

உள்ளூர் கலைஞர்கள் பலர் களத்தில் இறங்கி், வைக்கோலில் தங்கள் கை வண்ணத்தைக் காண்பித்தனர். பிரமாண்டமான விலங்குகளின் உருவங்களை உருவாக்கி, திருவிழாவாக நடத்தினார்கள். அது இணையத்தில் வெளியாகி, வைரல் ஆனது. கடந்த எட்டு ஆண்டுகளாகக் கலக்கிவருகிறது.

ஆகஸ்ட் இறுதியில் தொடங்கி, நவம்பர் வரை இந்தப் பிரமாண்டமான வைக்கோல் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் இதைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பிரமாண்டமாகி வருகிறது.        

 - பி.ராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick