ஸ்மார்ட் கிளாஸ்

Forestry - Funny Animals:

ரடி, எலி, மான், நீர் நாய், முள்ளெலி, அணில், முயல் போன்ற விலங்குகளோடு சேர்ந்து, காட்டில் சில வேலைகளைச் செய்தால் எப்படி இருக்கும். அந்த ஜாலியான அனுபவத்தை அளிக்கும் ஆப்ஸ் இது.

இந்த விலங்குகளோடு காட்டுக்குள் பயணிக்கும்போது, காற்றில் உதிரும் இலைகள், அழகாகப் பாடும் பறவைகள் ஆகியவற்றை நீங்கள் பார்க்கலாம். இந்த  விலங்குகளோடு சேர்ந்து மீன் பிடிப்பது, உணவுக்குத் தேவையான பழங்கள், கொட்டைகள், காளான்கள் போன்றவற்றைச் சேகரிப்பது, மலை ஏறுவது என  கொண்டாட்டமாக இருக்கும். காடு பற்றித் தெரிந்து கொள்ளவும், விலங்குகள் பற்றிப் புரிந்துகொள்ளவும் சிறந்த விளையாட்டு இது.

DIY Crafts:

ங்களிடம் பழைய உடை, உடைந்த பந்து, பட்டன்கள் போன்றவை இருக்கின்றனவா? அவற்றைக் குப்பையில் தூக்கிப்போடாமல்,  வேறு விதமாக மாற்றிப் பயன்படுத்தினால் நல்லதுதானே?

இப்படி, வீணான  பொருட்களை எந்த விதத்தில் உபயோகமுள்ள பொருட்களாக மாற்ற முடியும் என்பதையும், அவற்றை எவ்வாறு செய்வது என்பதற்கான குறிப்புகளையும் அளிக்கும் ஆப்ஸ் இது. இதைப் பயன்படுத்தி, குப்பைக்குச் செல்லும் பொருட்களுக்கு மறு வடிவம் கொடுத்து உங்கள் வீட்டையே அழகாக மாற்றலாம்.

Parcel of Courage:

லெக்ஸ் எனும் சிறுவனுக்கு அவனது தாத்தா, பாட்டியைப் பார்க்க ஆசை. அவர்கள் இருப்பதோ ரொம்ப தூரத்தில். அங்கிருந்து அவர்களை வரவழைத்து, தாத்தா பாட்டியோடு விளையாடி மகிழ அலெக்ஸுக்கு நாம் உதவ வேண்டும். ஏரோப்ளேன் மூலமாக வந்து போவதற்கு அவனுடைய பாட்டிக்குப் பயம். அந்தப் பயத்தைப் போக்க, அலெக்ஸின் அம்மா தயாரித்துக் கொடுக்கும், தைரியத்தை அளிக்கும் சக்தி கொண்ட சாக்லேட் பிஸ்கட்களை பாட்டிக்குக் கொடுக்க வேண்டும். இந்த அப்ளிகேஷனில்... நீங்கள் இதைக் கதையாகவும் படிக்கலாம், கதையோடு சேர்ந்தும் விளையாடலாம்.

Despicable Me:

டெஸ்பிக்கபிள் மீ’ படங்க ளில் வரும்  மினியன்களைப் பிடிக்காத சுட்டிகள் உண்டா? இந்த ஆப்ஸில் மினியன்களை வைத்து குதூகலமாக விளையாடி மகிழலாம். விளையாட்டோடு, மினியன்களின் வழக்கமான வேடிக்கைகளையும் சொதப்பல்களையும் நாம் அனுபவிக்கலாம். உங்கள்  விருப்பத்துக்கு ஏற்ற உடைகளையும் அவற்றுக்கு அணிவிக்கலாம். பல விதமான சக்திகளை வழங்கலாம். மினியன்கள் இருக்கும் இடத்தில் உற்சாகத்துக்கு என்ன குறைச்சல்!

- இனியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick