கோமல் இப்போ ஹேப்பி!

ள்ளி செல்லும் சிறுமி, கோமல். படிப்பில் கெட்டி. குறும்புக்கும் அளவு இல்லை. பக்கத்து வீட்டுக்கு குடும்பத்துடன் புதிதாகக் குடி வருகிறார் தந்தையின் நண்பர். வந்த சில நாட்களிலேயே கோமலிடம் அன்பாகப் பேசுகிறார். ஊரைச் சுற்றிப்பார்க்க கூட்டிச் செல்கிறார். ஐஸ்க்ரீம், பொம்மைகள் வாங்கித் தருகிறார்.

எல்லாம் சரிதான். ஆனால், அங்கிள் தன்னை ஏன் அதிகமாக தொட்டுப் பேசுகிறார் என்று கோமலுக்குப் புரியவில்லை. அம்மாவிடம் கேட்கவும் பயம். நாளாக நாளாக, சுட்டித்தனம் குறைந்து சோர்ந்துபோகிறாள் கோமல். படிப்பிலும் ஆர்வம் இல்லை. கோமலின் அம்மா விசாரிக்கிறார். கோமல் தயங்கித் தயங்கி நடந்ததைக் கூற, அம்மா அவள் தலையை வருடி, ‘உன் மேல் தவறு இல்லை கோமல், பயப்படாதே” என்கிறார்.

கோமலின் அப்பா, சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் கொடுக்கிறார். அங்கே இருந்து வரும் ஒருவர், கோமல் மற்றும் அவளது நண்பர்களுக்கு குட் டச், பேட் டச் பற்றி விளக்குகிறார். அப்போதுதான் கோமலைப் போலவே அவளது தோழிகள், தோழர்களுக்கும் இதுபோன்ற பிரச்னை வெவ்வேறு நபர்களால் ஏற்பட்டதைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்குத் தொந்தரவு அளித்தவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மறுபடியும் ஹேப்பியாக பள்ளிக்குச் செல்கிறாள் கோமல்.

‘சைல்டு லைன் இந்தியா’ அமைப்பு வெளியிட்டுள்ள இந்த 10 நிமிடக் குறும்படம், பாலியல் பற்றிய விழிப்புஉணர்வை சிறப்பாகச் சொல்கிறது. சிறந்த தேசியக் குறும்பட விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. தமிழ், பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்தக் குறும்படத்தை அனைத்துப் பள்ளிகளிலும் திரையிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையத்தில் தமிழில் காண...   https://www.youtube.com/watch?v=hCehDOJ1vWI

                    -ஐ.மா.கிருத்திகா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick