காட்டுக்குள்ளே திகில் பயணம்!

வெல்கம் மோக்லி

‘‘மோக்லி, பத்திரமா தப்பிச்சி ஓடு.’’

இதைப் படித்த உடனே ‘ஜங்கிள் புக்’ நினைவுக்கு வருமே? எழுத்திலும், கார்ட்டூன் தொடரிலும் கலக்கிய ஜங்கிள் புக், நம்முடைய கண்களுக்கு ரொம்பவும் அருகில் வரப்போகிறது.

ஜங்கிள் புக் கதையை 1967-ல் கார்ட்டூன் படமாக வெளியிட்ட வால்ட் டிஸ்னி நிறுவனம், இப்போது 3D அனிமேஷன் படமாகத் தயாரித்துவருகிறது. இதில், மோக்லி மட்டுமே மனிதர். மற்ற கதா பாத்திரங்கள் எல்லாம் அனிமேஷனாக உருவாக்கப்பட்டவை.

இது, இந்தியக் காட்டில் நடக்கும் கதை. காட்டுக்குள் வந்துவிட்ட குழந்தை மோக்லியை, விலங்குகள் வளர்க்கும். அவற்றுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து அவன் காப்பாற்றுவான். இதில், அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் சேத், மோக்லியாக வந்து கலக்கப்போகிறான். செப்டம்பர் 15 அன்று இந்தப் படத்தின் ட்ரெய்லர், இணையத்தில் வெளியிடப்பட்டது. 10 நாட்களில் ஒன்றரைக் கோடி முறை பார்க்கப்பட்டிருக்கிறது. ‘அயர்ன் மேன்’ படத்தின்  இயக்குநர் ஜான் ஃபவ்ரியூ, இந்தப் படத்தை இயக்குகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரலில் படம் வெளியாகிறது. உலகமே டபுள் எதிர்பார்ப்புடன் மோக்லியையும் அவன் நண்பர்களையும் பார்க்கக்  காத்திருக்கிறது.

 

 - வி.எஸ்.சரவணன்
                        

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick