சட்டையின் கதை!

- பருத்தி முதல் ஷோரூம் வரை...

ருத்திச் செடியில் பிறக்கும் பஞ்சு, ஆடையாக உருவாக எத்தனை நிலைகளைக் கடந்து வருகிறது, எத்தனை பேரின் உழைப்பு அதில் இருக்கிறது தெரியுமா? ஒரு சட்டையின் பிரமிக்கவைக்கும் தயாரிப்பு முறைகளைப் பார்க்கலாம் வாங்க!

 பருத்திச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட பஞ்சு, கலர் மிக்ஸிங் செய்யப்படும். லேப் புராசஸிங் செய்த பின், தேவையான நிறங்களில் இயந்திரத்தின் மூலம் நூலாகும்.

 எட்டு கேன்களில் நூல் வைக்கப்பட்டு, மெஷின் மூலம் ஒரே நூலாகத் திரிக்கப்படும்.

 5,000 மீட்டர் முதல் 15,000 மீட்டர் வரை நூல் சுற்றப்படும். பிறகு, பாபின் செய்யப்படும்.

 ஸ்பின்னிங் ஃப்ரேமுக்கு மாற்றப்பட்டு, நூல்கண்டுகளாகும்.

 அடுத்து, பின்னலாடை இயந்திரங்களில் கோன்கள் இணைக்கப்பட்டு, தேவையான அளவுகளில் துணி நெய்யப்படும்.

 நெய்யப்பட்ட துணிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். அவற்றில் தேவைப்படும் வண்ணங்களை மெஷின் மூலம் ஏற்றுவார்கள்.

 துணிகளில் உள்ள ஈரத்தைப் பிழிந்து எடுத்துவிட்டு, வேறொரு மெஷினுக்குள் செலுத்தி, ஈரத்தை நீக்குவார்கள். மெஷினுக்குள் இருந்து உலர்ந்த துணிகள் வெளிவரும்.

 கத்தரித்த துணிகளின் அளவுகள் சரிதானா என்பதை சரிபார்த்து, தைக்கும் பிரிவுக்கு அனுப்புவார்கள்.

 தைக்கும் பிரிவுக்கு வந்த துணிகளை, ஆர்டரின் அளவுகளுக்கு ஏற்ப டெய்லர்கள் சட்டையாகத் தைப்பார்கள்.

 தைத்த சட்டைகளின் அளவு சரிபார்க்கப்படும். பிறகு, அயன் செய்யப்பட்டு, பேக்கிங் பிரிவுக்கு அனுப்புபப்படும்.

 துணிகள் கார்மென்ட் யூனிட்டுக்குள் வந்ததும், டேமேஜ் ஏதேனும் உள்ளதா, அதன் நிறம், வண்ணங்கள் சரியாக உள்ளதா என சோதனை செய்வார்கள்.

 பேட்டன் மாஸ்டர்கள் ஆடைகளுக்கு ஏற்ப, வியாபாரிகள் கேட்டிருக்கும் அளவுகளில் பேட்டன் தயார்செய்வார்கள்.

 துணிகளை, மெஷின் அல்லது கத்தரியால் கத்தரித்து, சைஸ் ஸ்டிக்கர் ஒட்டி, அளவுகளை சரிபார்க்கும் பிரிவுக்கு அனுப்புவார்கள்.

 சட்டையில் அளவு மற்றும் விலை ஸ்டிக்கர், கம்பெனி பெயர் உள்ள ‘டேக்’குகள் உள்ளனவா என்பதைத் தர ஆய்வாளர்கள் சோதித்த பின், அழகாக மடித்து, பாலித்தீன் கவருக்குள் போடுவார்கள்.

 பாலித்தீன் கவருக்குள் போட்ட சட்டைகளை, அட்டைப் பெட்டிகளில் பேக்கிங் செய்து, ஆர்டர் கொடுத்த கடைகளுக்கு அனுப்பிவைப்பார்கள்.

 இது மாதிரியே, தயாரிக்கப்படும் சட்டைகள், பிற ஆடைகள் ஷோரூம்களுக்கு வந்து நம்மைக் கவர்கின்றன.


- கே.ஆர்.ராஜமாணிக்கம் படங்கள்: க.ரமேஷ் கந்தசாமி,  அ.குரூஸ் தனம்

மாடல்: நிருபன் சக்ரவர்த்தி

நன்றி:

ஸ்ரீஜெயப்ரபா எக்ஸ்போர்ட்ஸ், திருப்பூர்.
அவுட் ஃபிட் ரெடிமேட், புதுச்சேரி


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick