செல்லக்கிளியே!

வீட்டில் கிளி வளர்ப்பது ஒரு கலை. உங்கள் செல்லக் கிளியை எப்படி கவனமாகப் பராமரிக்கணும்னு தெரிஞ்சுக்குங்க.

 கிளி வளர்க்கும் இடத்தில் சரியான வெப்ப நிலை இருக்கணும். ஏ.சி ரூம், கிச்சன் மாதிரி ரொம்ப சூடான இடங்களில் கிளிகளை வளர்க்கக் கூடாது.

 தினமும் குறிப்பிட்ட நேரத்தை கிளிக்காகச் செலவிடுங்கள். நாம் பேசுவதை திருப்பிச் சொல்ல, நிறைய வார்த்தைகளைக் கற்றுக்கொடுங்கள்.

 கிளி வளர்க்க, கூண்டு ரொம்ப முக்கியம். கிளி ஏறி விளையாட, நடக்க வசதியா இருக்கணும். வட்ட வடிவிலான கூண்டுகளைவிட, மூலைகள் இருக்கும் சதுரம் அல்லது செவ்வக வடிவக் கூண்டுகளே நல்லது.

 சிறிய பந்து, கிளை உள்ள மரக்குச்சி போன்றவற்றை கூண்டுக்குள் வையுங்கள். கிளி விளையாடுவதற்கு உதவும்.

 கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு, அவ்வப்போது கூண்டைத் திறந்து பறக்கவையுங்கள். எங்கே பறந்தாலும் உங்கள் தோள்களில் வந்து அமர பயிற்சி கொடுங்கள்.

 கிளிகளைக் கொஞ்சும்போது  அலகு, சிறகுகள், உடலை மிக மெதுவாகத் தொடவும்.

 எப்பவும் சுத்தமான பழங்களை உணவாகக் கொடுங்கள். கூண்டில், ஒரு கிண்ணத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கட்டும்.

 பறவைகள் கூட்டமாக வாழ்ந்து பழக்கப்பட்டவை. கிளிகளை, வீட்டில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான், தான் தனியாக இருக்கும் உணர்வு கிளிக்கு ஏற்படாது.

- தி.விக்னேஷ் ஓவியங்கள்: பிள்ளை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick