உறுதிமொழி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

லியாண்டர் அட்ரியன் பயஸ்... 42 வயதிலும் கலக்கும் டென்னிஸ் புயல்.இவர் சொன்ன சுறுசுறு வரிகள் இவை...

 இலக்குகள், அழுத்தங்கள் எனக்கு இல்லை. இந்தக் கணத்தில் செய்வதை நேசித்துச் செய்கிறேன்.

 ஒன்றை செய்யக் காரணம், முனைப்பு ஆகியவை இருக்கும் என்றால், நாம் பொதுவாக அதில்  வெற்றிபெறுவோம்.

 இந்தியாவுக்காக ஆடுகிறேன் என்பது கிளர்ச்சி தந்து வெல்லத் தூண்டுகிறது. ரசிகர்கள் அனைவரின் கையிலும் வெற்றிக் கோப்பையைத் தரவே ஆசை.

 தோற்றால் கோபம், மனத்தளர்ச்சி வேண்டாம். உங்கள் மட்டையைக் கம்பீரமாகப் பேச விடுங்கள்.

 வயது, ஓர் எண் மட்டுமே. நான் ஆட ஆரம்பித்தபோது, கனவுகளை மட்டுமே  துரத்தினேன். மற்றவை தானே நடந்தன.

 உடலை கட்டுக்குள் வைத்திருப்பதே இத்தனை காலம் ஆடுவதன் காரணம். தீவிரப் பயிற்சி, சீரான உணவு, வாழ்க்கை முறையே வெற்றியின் ரகசியம்.

 104 டிகிரி காய்ச்சல், மூளைக்கட்டி தந்த வேதனையை, விம்பிள்டன் என்கிற உன்னதத்தை அடையப்போகிறேன் என்பது தூரத்தள்ளி உத்வேகம் தந்தது.

 சிறுவனாக இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் 10,000 முறை ஸ்கிப்பிங் செய்து, குதிகால் எலும்புகள் உடைந்தன. இன்றும் பயிற்சி செய்வதைத் தீவிரப்படுத்திதான் இருக்கிறேன்.

 வாழ்க்கை, பல கணங்களில் டென்னிஸ் போலத்தான். இலக்குகளை ஓரமாக வைத்துவிட்டுக் கையில் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

 ஒவ்வோர் இளம் இந்தியக் குழந்தையும் தன் கனவுகளோடு வாழ வேண்டும். மகத்தான மாற்றங்கள் நிச்சயமாக நிகழும்.

- பூ.கொ.சரவணன் ஓவியம்: பாரதிராஜா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick