சம்மரில் வர்றோம்... சக்சஸ் தர்றோம்!

- தி ஆங்ரி பேர்ட்ஸ் அனிமேஷன் மூவி

ஸ்மார்ட்போன் மூலம் ஓவர் நைட்டில் உலக ஹீரோவானது,  ஆங்ரி பேர்டு. இது வரை 100 மில்லியன் மக்கள்,  செல்போனில் டவுண்லோடு செய்து, விளையாடுறாங்க... விளையாடுறாங்க, விளையாடிட்டே இருக்காங்க. எத்தனையோ விளையாட்டு ஆப்ஸ் வந்தாலும், இந்தக் கோபக்காரப் பறவைகளின் கெத்து குறையவே இல்லை. ஏன் இந்தப் பறவைகள் எப்பவும் கோபமா இருக்கு? அதுக்கான விடையைச் சொல்ல வரப்போகுது ‘தி ஆங்ரி பேர்ட்ஸ்’ ஹாலிவுட் அனிமேஷன் படம்.

இந்தப் படத்துக்கான டிரெய்லர், இணையத்தில் வெளியாகி இரண்டு கோடி ஹிட்ஸ் அடிச்சு ஓடிட்டு இருக்கு. ரசிகர்கள், கண்களை உருட்டி உருட்டிப் பார்த்துட்டிருக்காங்க. ஆங்ரி பேர்ட்ஸ் ஆப்ஸை உருவாக்கிய ‘ரோவியோ என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் மற்றும் ‘கொலம்பியா பிக்சர்ஸ்’ இணைந்து இந்தப் படத்தைத்  தயாரிக்கிறாங்க. ‘சோனி’ நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடப்போகுது.

ரம்மியமான தனித் தீவில் ஒற்றுமையும் மகிழ்ச்சியுமா பறவைகள் வாழ்ந்துட்டு இருக்கு. அந்தக் கூட்டத்தில் நம்ம ஹீரோவான ரெட் மற்றும் ஸ்பீடிசக் கொஞ்சம் சிடுசிடுப்பா இருப்பாங்க. முக்கியமா, வெளியாட்கள் யாராவது வந்தால், பயங்கர கோபம் வந்துடும். ஒரு நாள் மர்மமான முறையில் க்ரீன் பிக்ஸ் (Green Pigs) அந்தத் தீவுக்கு வருது. அப்புறம் என்ன நடக்குதுங்கிறதுதான் படத்தின் கதை.

அடுத்த வருஷம், சம்மர் லீவை டார்கெட் வெச்சு படம் வேகமா தயாராகிட்டு இருக்கு.

-பி.எஸ்.முத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick