ஸ்மார்ட் கிளாஸ்!

ம் கையில் செல்போன் இருந்தால் போதும். நமக்காகவே கொட்டிக் கிடக்குது சூப்பர் சூப்பர் ஆப்ஸ். ஜாலியா விளையாடலாம். கணக்குப் புலி, அறிவியல் சிங்கம் எனப் பல பட்டப் பெயர்களை வாங்கலாம்.

Coosi Box

உங்களின் ஓவியத் திறமைக்கும் கற்பனைக்கும் சவால்விடும் ஜாலி  ஆப்ஸ். இதில் இருக்கும் ஓவியங்களைச் சுற்றி, உங்களின் கற்பனையால் ஓர் இடத்தை உருவாக்க வேண்டும். உதாரணமாக, ஒரு சிறுவன் தனியாக நின்றிருப்பான். அவனை, விண்வெளியில் மிதப்பது போல, போர்க்களத்தில் இருப்பது போல, பள்ளி மைதானத்தில் விளையாடுவது போல இஷ்டப்படி வரைந்து, உலாவ விடலாம்.

Find them all

விலங்குகள், பறவைகள் மீது ஆர்வத்தைத் தூண்டி, அவற்றைத் தெரிந்துகொள்ள உதவும் ஆப்ஸ். காட்டப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளை, ஒவ்வொரு கண்டமாகத் தேர்ந்தெடுத்து, அங்கே வசிப்பவை எவை எனக் கண்டுபிடிக்க வேண்டும். கேட்கும் கேள்வி மூலம், ஒளிந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்கலாம். அந்த விலங்கு பற்றிய கூடுதல் தகவல்களை அறியலாம். இரவில் மட்டுமே காணக்கூடிய விலங்குகளைக் கண்டுபிடிக்க, அவை எழுப்பும் ஒலிகளையும், டார்ச் விளக்கைப் பயன்படுத்துவது போன்ற அட்ராக்‌ஷன் நிறைந்த இந்த ஆப்ஸ், பறவை மற்றும் விலங்குகளை அறிய உதவும் அசத்தல் என்சைக்ளோபீடியா.

Kids Place

அப்பாவின் டேப்லெட்டில் விளையாடும்போது, தவறுதலாக எதையாவது அழுத்தி, முழித்த அனுபவம் இருக்கிறதா? அப்படியானால், உங்களுக்கான முக்கியமான ஆப்ஸ் இது. நீங்கள் விளையாட விரும்பும் விளையாட்டுகள், பயன்படுத்தும் செயலிகளை மட்டுமே உங்கள் கண்களுக்குக் காட்டும். மற்ற எதையும் தவறுதலாக அழுத்திவிட முடியாது. விரும்புவதை மட்டும் காட்டுவதோடு, குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்தும்படி அமைக்கலாம். வீடியோ கேம் விளையாட்டில், அடுத்தடுத்த லெவலுக்குப் போகும்போது, ‘டைம் ஆகுது... போய்ப் படி பிரதர்’ என எச்சரிக்கும்.

Tynker

கற்பனைத் திறன்களை செயல்படுத்திப் பார்க்கத் துடிப்பவர்களுக்கான சூப்பர் ஆப்ஸ். இதன் மூலம், ஒரு கணினி புரோக்ராமிங் மொழியைக் கற்றுக்கொண்டு, செயல்படுத்திப் பார்க்கலாம். வடிவங்களைப் புரிந்துகொள்வது, சிக்கல்களைத் தீர்ப்பது, கணிதத்தின் தொடர் வரிசைகளைக் காட்சிகளாக உருவாக்கிச் செயல்படுத்திப் பார்ப்பது என, கற்பனைத்திறனை நுண்ணறிவோடு இணைத்து உங்களை மேம்படுத்தும் ஆப்ஸ்.

- சுப.தமிழினியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick