ஸ்கிப்பிங்...

நேராக நின்று முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின் சீராக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

புல் தரை, மண் தரையில் விளையாடுவது நல்லது. ஈரத் தரையிலும், டைல்ஸ் பதித்திருக்கும் இடங்களிலும் விளையாடுவதைத் தவிர்க்கவும்.

ஸ்கிப்பிங் விளையாடும்போது, இறுக்கமான ஆடைகளை உடுத்தியிருக்கக் கூடாது.

வெறும் வயிறோடு ஸ்கிப்பிங் ஆடக் கூடாது.

முன்புறம் தாண்டுதல், பின்புறம் தாண்டுதல், ஓடிக்கொண்டே தாண்டுதல், பக்கவாட்டில் தாண்டுதல் என ஸ்கிப்பிங்கில் வகைகள் இருக்கின்றன.

பலவீன உடல்வாகு உடையவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்பே ஸ்கிப்பிங்  ஆட வேண்டும்.

15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் ஆடினால்,   2 கிலோமீட்டர் ஓடியதற்குச் சமம். உடலை வலிமையாக்கும். முதுகுத் தண்டுவடத்துக்கு     நல்ல பயிற்சி.

உங்கள் தோளிலிருந்து தரை தொடும் அளவின் இரண்டு மடங்கான கயிறே, விளையாடுவதற்கு சரியான நீளம்.

உடலின்  தேவையற்ற கொழுப்பைக் குறையச் செய்வதில் ஸ்கிப்பிங் முதன்மையானது.

இருவர், மூவர் என ஆடும்போது,  மற்றவரைவிட அதிகமாகத் தாண்ட வேண்டும் என தனது சக்தியை   மீறி விளையாடக் கூடாது.

போட்டிக்குத் தயார் செய்வதுபோல கடினமாக ஆடாமல், நண்பர்களோடு விளையாடுவதுபோல மகிழ்ச்சியோடு ஆட வேண்டும்.

- வி.எஸ்.சரவணன்

படம்: ஸ்ரீநிவாசன்

மாடல்: திஷா, சபரீஷ், சுவீதா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick