ஹாபி...ஹாபி...

லீம் அலி எழுதிய ‘பறவைகள் உலகம்’, க்ரியா வெளியீடான ‘பறவைகள்’ போன்ற புத்தகங்கள்,  உங்களின் பறவை நோக்குதலுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

பறவை நோக்குதல் (Birdwatching or Birding), உற்சாகம், சுற்றுச்சூழல் மீது ஆர்வத்தை உண்டாக்கும் அற்புதமான ஹாபி.

பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவது என உலகின் இயக்கத்துக்கு முக்கியப் பங்காற்றுவன, பறவைகள்.

பறவைகளை, அவற்றின் இயல்பிலேயே இருக்கவிட்டு ரசிக்க வேண்டும். அதிகாலை அல்லது மாலை நேரமே பறவைகளைக் காண சிறந்த நேரம். இதை உங்கள் வீட்டு மொட்டை மாடியில் தொடங்குங்கள். 10 பறவைகளையாவது உங்கள் சுற்றுப்புறத்தில் பார்க்க முடியும்.

பிறகு, நண்பர்களோடு சேர்ந்து ஒரு குழு அமையுங்கள். அருகில் உள்ள குளம், ஏரி போன்ற பகுதிகளுக்குச் சென்று பாருங்கள்.  பறவைகளின் நிறம், அலகின் வகை, பறக்கும் இயல்பு, கூடு கட்டும் முறை போன்றவற்றைக் குறிப்பு எடுங்கள். பின்பு, அவற்றைப் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரியுங்கள். வசதியைப் பொறுத்து, தொலைநோக்கி, கேமரா போன்றவற்றை வாங்குங்கள். பெரியவர்கள் குழுவோடு சேர்ந்து, மலைகள், காடுகளுக்குச் சென்று நூற்றுக்கணக்கான பறவைகளைக் கண்டு ரசியுங்கள்.

- சுப.தமிழினியன்

படங்கள்: அ.குரூஸ்தனம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick