Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வண்ண வண்ணக் குடைகள்!

‘‘இது செப்டம்பர் மாசம்னு காலண்டரைப் பார்த்துதான் ஒப்புக்கவேண்டியிருக்கு. ஆனா, மே மாசம் மாதிரி வெயில் வெளுத்துக்கட்டுது” என்றான் ரித்திக்.

‘‘ஆமாம், ஒவ்வொரு வருஷமும் மழை குறைஞ்சுட்டேபோகுது. நேற்றுகூட எங்க கிளாஸ் டீச்சர், ‘மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு, ஆறு, ஏரி, குளங்களை முறையாகப் பராமரிப்பது போன்ற விஷயங்கள் மூலம்தான் இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியும்’னு சொன்னாங்க” என்றாள் அச்சு.

‘‘மழையில் குடை பிடிச்சுக்கிட்டு நடக்கிறது, ஒரே குடையில் ஒட்டிக்கிட்டுப் போறது எல்லாம் ரொம்ப ஜாலியா இருக்கும். ஹூம்... இப்போதான், குடைக்கு வேலையே இல்லையே” என்றான் சாமுவேல்.

‘‘மழையில் மட்டும்தான் குடையை யூஸ் பண்ணணுமா? வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாக்கவும் யூஸ் பண்ணலாமே” என்றான் ரித்திக்.

‘‘நீ சொல்றது சரிதான். ஆனா, தினமும் குடையை எடுத்துக்கிட்டுப் போறதை நிறையப் பேர் பெரிய தொந்தரவா நினைக்கிறாங்க. அது, வெயிலுக்கு எவ்வளவு நல்லதுனு யோசிக்கிறதே இல்லை. பெரியவங்களைவிட, நம்மள மாதிரி பசங்களுக்கு வெயிலால் பாதிப்பு அதிகம். அப்படி இருக்கிறப்ப, வெயிலுக்கும் குடையை எடுத்துட்டுப் போகலாமே” என்றாள் அச்சு.

‘‘கரெக்ட். எங்க ஸ்கூல்ல  ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி 10-ம் தேதி உலகக் குடைகள் தினம் செலிப்ரேட் பண்ணுவாங்க.  எல்லோரும் குடைகளோடு போவோம். ரொம்ப ஜாலியா இருக்கும்” என்றான் சாமுவேல்.

‘‘நம்மளை மாதிரி சுட்டிகளை அட்ராக்ட் பண்றதுக்காகவே விதவிதமான கலர்களில், கார்ட்டூன் படங்கள் போட்ட குடைகள் இப்போ கிடைக்குது. அதனால், எப்பவும் குடையை யூஸ் பண்ணுவோம்... உடலைப் பாதுகாப்போம்” என்றான் ரித்திக்.

- சு.சூரியா கோமதி

படங்கள்: இரா.யோகேஷ்வரன்

நன்றி: ரேவதி ஸ்டோர்ஸ், பெரம்பூர், சென்னை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஜாலி... கேலி... அன்பு...அடுக்குமாடி நட்பு!
பொருத்தமான பொக்கிஷ அதிகாரி!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close