Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொம்மைகளோடு விளையாட என்னிடம் வாங்க!

-'ரென்ட் ப்ளே' ரியா

‘‘பார்பி டால், மிக்கி மவுஸ், டொனால்டு டக், ப்ளாஸ்ட்டர் கன்ஸ் (துப்பாக்கி), ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என உங்களுக்கு எந்தப் பொம்மை வேணுமோ என்கிட்டே வாங்க, வாங்கிட்டுப்போய் விளையாடிட்டு திருப்பிக் கொடுங்க” என்கிறார் ரியா அருள்.

சென்னை, துரைப்பாக்கத்தில் இருக்கும் எட்டு வயது ரியா,   ரென்ட்-ப்ளே (RENT-PLAY) நிறுவனத்தின் சுட்டி சிஇஓ.

அது என்ன ரென்ட் ப்ளே?

“வாடகைக்கு புக்ஸ் கொடுக்கிற லைப்ரரி மாதிரி, பொம்மைகளைக் கொடுக்கிறதுதான் ரென்ட் ப்ளே. ஒரு நாள் என் ஸ்கூல் டீச்சர், ‘நீங்க பெரியவங்களாகி  என்ன செய்வீங்க?’ என்று கேட்டார்.  சயின்டிஸ்ட், டாக்டர்னு ஒவ்வொருத்தரும் சொன்னாங்க.  நான், ‘ஏன் பெரியவள் ஆகும் வரை காத்திருக்கணும். இப்பவே ஏதாவது செய்யலாமே?’ என்றேன். அப்போ வந்த யோசனைதான் இது. என்னிடம் காஸ்ட்லியான பொம்மைகள் இருக்கின்றன. ஆனால், நம் வீட்டில் வந்து விளையாடும், டிரைவர் மகள் ஜென்னிக்கு இல்லையே. அவளுக்கு நான் ஏன் ஷேர் செய்யக் கூடாது என நினைத்தேன்’’ என்கிறார் புன்னகையுடன்.

இந்த விஷயத்தை ரியா தன் அம்மாவிடம் சொல்ல, அவரின் நண்பர்களின் ஆலோசனையில் ஒரு வெப்சைட் உருவாக்கப்பட்டது.

“ரியாஸ் ரென்ட் ப்ளே (http://rheasrentplay.com/) என்பதுதான் என்னுடைய வெப்சைட்.  அதில், என்கிட்டே இருக்கிற பொம்மைகள் பற்றிய தகவல், வாடகை விவரம், என்னுடைய போன் நம்பர் இருக்கும். போன் பண்ணி  புக் பண்ணிக்கலாம். என்னிடம் உள்ள பல பொம்மைகள் இந்தியாவில் கிடைக்காது. மொத்தம் 150 பொம்மைகள் இருக்கு. ஒவ்வொரு பொம்மையும் 12 ஆயிரம் ரூபாய் விலை. ஒரு பொம்மைக்கு 10 நாளைக்கு 250 ரூபாய் வாடகை. மூன்று பொம்மைகளுக்கு ஒரு மாதத்துக்கு 500 ரூபாய். இப்படி ஆரம்பிச்ச ஒரே வாரத்துல, 30 ஆர்டர்கள் வந்தன. இதுல வாடகைப் பணம் என்பது முக்கியம் இல்லை. நான் விளையாடி சந்தோஷப்பட்ட பொம்மைகளை மத்தவங்களுக்கும் கொடுக்கிற சந்தோஷம்தான் முக்கியம். என்னுடைய கம்பெனியின் டேக்லைன், ‘பே லெஸ், ப்ளே மோர் (PAY LESS, PLAY MORE) என்பதுதான்” என்கிறார் தெளிவான குரலில்.

பொம்மைகளை வாடகைக்கு கொடுக்கும் இதுபோன்ற ரென்ட் ப்ளே நிறுவனங்கள், சமீப காலமாக இந்தியாவில் புகழ்பெற்று வருகின்றன. எனினும், அவற்றின் பொறுப்பாளர்களாகப் பெரியவர்கள் இருப்பார்கள். ஆனால், ரியாஸ் ரென்ட் ப்ளேவின் முழுப் பொறுப்பாளர் ரியாதான்.

‘‘வரும் ஆர்டர்கள், பணம் வாங்குவது எல்லாமே ரியாவே கவனிப்பார். ரியாஸ் ரென்ட் ப்ளே லான்ச் மீட்டிங்கில்,  மேடை ஏறி 40 நிமிடங்கள் பேசினார். அதற்குகூட நாங்கள் எதுவும் தயார்செய்து கொடுக்கவில்லை. படிக்கும்போதே தானும் ஒரு நிறுவனத்தை நடத்துகிறோம் என்கிற தன்னம்பிக்கையும் உற்சாகமும் அவரிடம் வந்துவிட்டது’’ எனப் பெருமையுடன் சொல்கிறார்கள் ரியாவின் பெற்றோர்.

இவ்வளவு பொம்மைகளையும் ரியா எங்கே வாங்கினார்?

“பல பொம்மைகளை ஆன்லைனில் ஆர்டர் பண்ணி வாங்குவோம். எந்த ஊருக்குப் போனாலும் அங்கே இருக்கிற பொம்மை கடைகளுக்கு விசிட் அடிச்சுடுவேன். எனக்கு, போனி குதிரைப் பொம்மைகளை  ரொம்பப் பிடிக்கும். அது, இந்தியாவில் எங்குமே கிடைக்கலை. அதுக்காகவே, திட்டம் போட்டு ஃபேமிலியோடு பாங்காக் போய் மூன்றுபொம்மைகள் வாங்கிவந்தேன்’’ என்கிறார் குதூகலமாக.

எல்லாம் சரி, பொம்மைகளை வாடகைக்கு வாங்கிச் செல்பவர்கள் பத்திரமாக வைத்திருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? தெரியாமல் உடைத்துவிட்டால்?

‘‘பொம்மையை வாங்கிட்டு போகும்போதே, ‘நான் பொம்மையைப் பத்திரமா பார்த்துப்பேன்’னு ஒரு பிங்க்கி ப்ராமிஸ் பண்ணிட்டா போதும். சூப்பரா வெச்சுப்பாங்க’’ என அழகாகச் சிரிக்கிறார் ரியா.

- மு.சித்தார்த் படங்கள்: மா.பி.சித்தார்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சோட்டாவுக்கும் டோராவுக்கும் சண்டை!
சம்மர் ஸ்பெஷல்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close