விடை சொல் வினோத்!

IQ கதைகள்- சுப.தமிழினியன், ஓவியங்கள்: பிள்ளை

தேர்வுகள் முடிஞ்சாலே வினோத்துக்குக் கொண்டாட்டம்தான். அவங்க பாட்டி கிராமத்துக்குப் போய்  ஆட்டம் போடுவான்.

எப்பவும் அம்மாவோடு பஸ்லதான் போவான். இந்த முறை அப்பாவுக்கு இரண்டு நாட்கள் ஆபீஸ் லீவு. ‘‘அதனால, பைக்லேயே போகலாம்’’னு அப்பா சொன்னார்.

ஊருக்குக் கிளம்புறதுக்கு முதல் நாள் இரவு அப்பாவோட பேசும்போது, ‘‘தாத்தாவோட வீடு நம்ம வீட்டுல இருந்து எந்தப் பக்கம் இருக்கு?’’னு கேட்டான் வினோத். 

‘‘நான் புதிர் போட்டுச் சொல்றேன். கண்டுபிடி பார்ப்போம். நம்ம வீட்டுல இருந்து கிழக்குப் பக்கமா அஞ்சு கிலோமீட்டர் போயிட்டு, அங்கே இருந்து வலது பக்கம் திரும்பி, மூணு கிலோமீட்டர் போயிட்டு, கோயிலை ஒட்டி இடது பக்கம் திரும்பி, 10 கிலோமீட்டர் போய், ஆலமரத்துக்கிட்ட வலது பக்கம் திரும்பி ரெண்டு கிலோமீட்டர் போனா, தாத்தா வீடு’’ என்றார்.

சுத்திச்சுத்தி நின்னு யோசிச்ச வினோத், ‘‘ஓகோ, தாத்தா வீட்டின் திசையையும், தூரத்தையும்  கண்டுபிடிச்சுட்டேன்’’னு விடையைச் சொன்னான்.

மறுநாள், காலையிலேயே பரபரப்பாகி, ‘‘அப்பா, சீக்கிரம் கிளம்பலாம். நீங்க ரெடியாக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?’’னு கேட்டான் வினோத்.

‘‘கடிகாரத்துல பெரிய முள் இப்போ இருக்கிற இடத்துல இருந்து 180 டிகிரி தூரத்துல போய்  நிற்கும்போது’’னு சொன்னார் அப்பா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்