கண்மாய் ஏன் அசுத்தமானது?

‘நீர்,நீலம்,காற்று மாசடைதல்

‘‘ஊர் சுற்றலாம் வாரீங்களா?'' என்று கேட்டதும், ‘‘நாங்க ரெடி'’ என வகுப்பறை அதிர குரல் கொடுத்தார்கள் மாணவர்கள்.

மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தேன். குறிப்பேடு மற்றும் பேனாவுடன் பள்ளிக்கு அருகில் இருக்கும் கண்மாய்க்கு அழைத்துச் சென்றேன்.

மாணவர்களை உற்றுநோக்கச் செய்து, கண்மாய் எவ்வாறு மாசுப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பு எடுக்கச் சொன்னேன்.

பள்ளிக்கு வந்ததும், தாங்கள் கண்டறிந்த விஷயங்கள் குறித்து ஒவ்வொரு குழுவையும் தங்களுக்குள் கலந்துரையாடச் சொன்னேன். அதன் பின்னர், கண்மாய் எதனால் மாசுபட்டுள்ளது, எவ்வாறு அதனை சுத்தப்படுத்த முடியும்? என்று இரு தலைப்புகளில் குறிப்புகளைத் தயாரிக்கச் சொன்னேன்.

இப்போது, ஒரு குழுவிலிருந்து கண்மாய் எதனால் மாசுபட்டது என்பது பற்றிய குறிப்புகளைப் படிக்க, என்ன செய்தால் சுத்தப்படுத்த முடியும் என்ற குறிப்புகளை அடுத்த குழுவினர் படிக்க வேண்டும்.

உற்றுநோக்குதல், நீர் மாசுபடுதல், நீர் மாபபடுவதைத் தவிர்த்தல் குறித்த அறிவின் அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பீடு அளித்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்