ஆளை மாற்று; எண்ணை உருவாக்கு!

‘எண்கள்’ பகுதிக்கு உரியது.

பெரிய எண்... சிறிய எண் இவற்றைக் கற்றுக்கொள்ளவும், மனதில் பதியவைக்கவும், செயல்பாடு ஒன்றை என் வகுப்பில் செய்தேன்.

1, 2, 5, 6 ஆகிய எண்களை எழுதிய மின்அட்டைகளை மாணவர்கள் தயார்செய்தார்கள். ஒரு மாணவருக்கு ஓர் அட்டை என அவரவர் சட்டைகளில் குண்டூசி மூலம் இணைத்துக்கொண்ட மாணவர்களிடம், ‘‘நீங்கள் இடம் மாறி மாறி எத்தனை எண்களை உருவாக்க முடியுமோ செய்யுங்கள்'' என்றேன். அந்த எண்களை குறித்துக்கொள்ளச் சொன்னேன். அப்படி உருவாக்கிய எண்களில் எது பெரியது எனக் கேட்டேன். எந்த மாணவர் சரியான பதிலை முதலில் சொன்னாரோ, அவரிடம் அந்த எண்ணை எழுதிக் கொடுத்தேன். அதேபோல சிறிய எண்ணுக்கும் செய்தேன்.

மாணவர்கள், எவ்வளவு விரைவாக அதிக எண்களை உருவாக்குகிறார்கள் என்பதன் அடிப்படையில் மதிப்பீடு அளித்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்