குறில், நெடில் அறிவோம்!

‘குறில்-நெடில்’ பகுதிக்கு உரியது.

யிர் எழுத்துகளில் குறில், நெடில் எழுத்துகளை மாணவர்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள உதவும் செயல்பாடு ஒன்றைச் செய்து, மதிப்பீடு அளிக்கலாம்.

மாணவர்களை மைதானத்துக்கு அழைத்துச் சென்று, எல்லோரையும் ஓர் இடத்தில் நிற்கச்செய்யவும். ஆசிரியர் சிறிது தூரம் சென்று, ஒரு மாணவர் பெயரை அழைக்கவும். அவர் அருகில் வந்ததும், அந்த இடத்தில் சுண்ணாம்பால் வட்டமிட்டு, A எனக் குறிப்பிடவும். அடுத்து, இன்னும் அதிகச் சத்தம் கொடுத்தால்தான் கேட்கும் என்கிற தூரத்துக்குச் சென்று, இன்னொரு மாணவர் பெயரை அழைக்கவும். வந்தவரை நிறுத்தி வட்டமிட்டு, B எனக் குறிப்பிடவும்.

இப்போது, A வட்டத்தில் இருக்கும் மாணவரை குறில் எழுத்துகளையும், B வட்டத்தில் இருக்கும் மாணவரை நெடில் எழுத்துகளையும் கூறச் செய்யவும். பிறகு, குறில் மற்றும் நெடில் எழுத்துகளில் தொடங்கும் பெயர்ப் பட்டியல் இட்ட சுவரொட்டிகளைத் தயார்செய்யவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்