வட்டமாக அமர்ந்து வகுத்திகள் அறிவோம்!

‘எண்ணியல்’ பகுதிக்கு உரியது.

மாணவர்களை வட்டமாக அமரச்செய்யுங்கள். எண்கள் எழுதப்பட்ட துண்டு அட்டைகளை வட்டத்தின் நடுவில் வைக்கவும். ஓர் எண்ணை ஆசிரியர் கூறியதும் (எகா: 36), மாணவர்கள் வரிசையாக எழுந்து வந்து, அந்த எண்ணின் வகுத்திகளை எடுக்க வேண்டும். பிறகு, ஒருபுறம் வரிசையாக நிற்க வேண்டும். 36-ன் வகுத்திகள்: 1, 2, 3, 4, 9, 12, 18, 36

ஆசிரியர், மீண்டும் ஓர் எண்ணைக் கூற (எ.கா: 40), மாணவர்கள் அந்த எண்ணின் வகுத்திகளை எடுத்துவந்து, மறுபுறம் வரிசையாக நிற்க வேண்டும். 40-ன் வகுத்திகள்: 1, 2, 4, 5, 8, 10, 20, 40. இந்த இரண்டு எண்களின் பொதுவான வகுத்திகள் வைத்திருப்பவர்களை மட்டும் தனியாக நிற்கவைக்கவும்.

பொதுவான வகுத்திகள்: 1, 2, 4

பெரிய வகுத்திகளை வைத்திருப்பவர் மட்டும் வட்டத்தின் நடுவில் சென்று நிற்க வேண்டும். (மீ.பெ.வ - 4). இவ்வாறு விளையாட்டு முறையில் மீப்பெரு பொது வகுத்திகளைக் கண்டறியச்செய்து, மதிப்பீடு செய்யலாம். இதே முறையிலேயே மீச்சிறு வகுத்திக்கும் விளையாடி மதிப்பிடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்