சீட்டைத் திறந்து இணையைக் கண்டுபிடி!

‘தாவரங்களின் புற அமைப்பியல்’ பகுதிக்கு உரியது.

சார்ட் பேப்பரை 4X3 அங்குல அளவில் 50 துண்டுகள் வெட்டிக்கொள்ளவும்.

பாடப் பகுதியில் வரும் பெயர்களை (உதாரணமாக: கூம்பு வடிவம் – கேரட்) தனித்தனி அட்டைகளில் எழுதிக்கொள்ளவும். ஓவியமாகவும் வரைந்துகொள்ளலாம். இவ்வாறு 25 இணைகளைத் தனித் தனியாகப் பிரித்து, 50 அட்டைகளில் எழுதி, மேசையின் மீது பரப்பிவைக்கவும்.

முதலில், ஒரு மாணவர் மேசையின் மீதுள்ள ஏதேனும் இரு அட்டைகளைத் திறந்துவைக்க வேண்டும்.  அந்த இரு அட்டைகளும் இணையாக இருந்தால், அந்த அட்டைகளை அவர் எடுத்து வைத்துக்கொண்டு, மீண்டும் வேறு இரண்டு அட்டைகளைத் திறந்துவைக்க வேண்டும்.

இணை தவறாக இருந்தால், அதை மூடி, அதே இடத்தில் வைத்துவிட்டு வேறு ஒரு மாணவர் ஆட்டத்தைத் தொடர வேண்டும். ஆட்ட முடிவில், யார் அதிக இணையைச் சேர்க்கிறார்களோ, அவரே அதிக மதிப்பெண்களைப் பெறுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்